பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் இது கிடையாது..! குஷியில் போட்டியாளர்கள் ! என்ன தெரியுமா..?

0
966
Big-boss

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது பாகம் நேற்று ஒளிபரப்பானது. நேற்று ரசிகர்களின் ஆரவரத்திற்கு இடையே பல்வேறு போட்டியாளர்களையும் கமல், மக்களுக்கு அறிமுகபடுத்தி பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்தார்.

kamal2

100 நாட்கள் ஒரே வீட்டில் இது தான் பிக் பாஸ் என்பது நாம் அறிந்த விடயம் தான். ஆனால், இம்முறை கலந்து கொண்ட போட்டியாளர்கள் ரசிகர்களுக்கு சுவாரசியமான அனுபவத்தை கொடுப்பார்களா என்பது சந்தேகம் தான். மேலும் இதில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் கடந்த ஆண்டு பங்குபெற்ற போட்டியாளர்கள் அளவிற்கு நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டு செல்வர்களா என்று ரசிகர்கள் எண்ணி வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாள் மட்டுமே எந்த ஒரு பெரிய டாஸ்க் இல்லாமல் தான் இருக்கும்.ஆனால், போக போக கடினமான சில டாஸ்க்குகளை வைத்து நிகழ்ச்சியை விருவிருப்பாக கொண்டு சென்று விடுவார்கள். அப்போது தான் போட்டியாளர்களுக்கு ஒரு இக்கட்டான சூழல் ஒன்று ஏற்படும்,அது தான் எலிமிநேஷன். கண்டிப்பாக வாரம் ஒருமுறையாவது இந்த போட்டியில் இருந்து யார் வெளியே செல்லப்போகிறார்கள் என்று அறிவித்து விடுவார்கள்.

kamal

ஒரு சில போட்டியின் மூலமும் அல்லது சக போட்டியாளர்கள் விரும்பாத நபர்களை தான் இந்த போட்டியில் இருந்து வெளியேற்றுவார்கள். எலிமிநேஷன் தான் போட்டியாளர்கள் வயிற்றில் புளியை கரைக்கும் ஒரு விடயமாக இருந்து வருக்கிறது. ஆனால், அந்த டென்சன் போட்டியாளர்களுக்கு இந்த வாரம் இல்லை என்று பிக் பாஸ் முடிவெடுத்துள்ளாராம். அதனால் இந்த வாரம் முழுக்க எந்த ஒரு போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்பப்பட மாட்டார்கள் என்று தகவலகள் கிடைக்க பெற்றுள்ளது.