விஜய் மட்டும் ஓகே சொன்னால் அவருக்கான கதை இதுதான்.! ரஞ்சித் கொடுத்த ஷாக்! கதை என்ன தெரியுமா.?

0
1067
vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜய் யார் இயகத்திகல் நடிக்கப்போகிறார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

vijay actor

இந்நிலையில் இயக்குனர் ரஞ்சித், நடிகர் விஜய்யை வைத்து எப்போது படம் எடுப்பார் என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். காலா படத்திற்கு பிறகு இயக்குனர் ரஞ்சித்தின் டிமாண்ட் இந்தி சினிமா வரை சென்று விட்டது. அவருடன் இணைந்து படம் தயாரிக்க பல்வேறு இந்தி பட தயாரிப்பு நிறுவனங்களும் இயக்குனர் ரஞ்சித்திற்கு வலை வீசி வருகின்றனர். இந்நிலையில் ஒரு வேளை விஜய்யை வைத்து படம் எடுத்தால் இப்படி தான் இருக்கும் என்று இயக்குனர் ரஞ்சித் கூறியுள்ளர்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் ரஞ்சித்திடம் ‘விஜயை வைத்து படம் எடுப்பபீர்களா’ என்று கேள்விகேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த இயக்குனர் ரஞ்சித் ‘நான் விஜய் சார் வைத்து படம் இயக்கினால், அது காதல் கலந்த அரயிசியல் கதையாக தான் இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார். ரஞ்சித் எடுத்த கடைசி இரண்டு படங்களும் அரசியல் கலந்த படமாக தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Pa. Ranjith

மேலும், சமீப காலமாக நடிகர் விஜய் அரசியல் கலந்த கதைகளை தான் தேர்வு செய்து வருகிறார். விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான ‘மெர்சல்’ படத்திலும் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை தாக்கி பேசினார் என்று அந்த படத்திற்கு பல எதிர்ப்புகளும் வந்தது. தற்போது விஜய் நடித்து வரும் ‘விஜய் 62’ படமும் ஒரு அரசியல் கலந்த படம் தான் என்று சமீபத்தில் வெளியான அந்த படத்தின் சில புகைப்படங்களும் நமக்கு உணர்த்தியது.