உறுதியானது பிக் பாஸ் சீசன்-2.. ஆதாரத்துடன் வெளிவந்த டீசர்..! வைரலாகும் வீடியோ உள்ளே

0
1462
- Advertisement -

கடந்த ஆண்டு விஜய் டிவியில் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் தான் அரசியலுக்கு வரப்போவதாக மறைமுகமாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிந்தியில் 11 சீஸன்களை கடந்து சென்றிருக்கிறது. ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் தான் தமிழில் பிக் பாஸின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மிகவும் பிரபலமான நடிகர்களையே அணுகிவந்தனர் . பின்னர் கமலஹாசனே இந்த சீஸனையும் தொகுத்துவழங்க இருப்பது உறுதிசெய்தனர்.

- Advertisement -

ஏற்கனவே கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசன் அரசியல் குறித்த பல கருத்துக்களை பற்றி பேசி தனது அரசியல் என்ட்ரிக்கு விதத்தை கொண்டார். தற்போது கமல் கட்சியை தொடங்கிவிட்ட நிலையில் இந்த பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை தனது அரசியல் வளர்ச்சிக்கு பாலமாக உபயோகித்துக் கொள்வாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் தற்போது பிக் பாஸ் 2 வின் ப்ரோமோ விளம்பரம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த ப்ரோமோ விளம்பரம்.

Advertisement