கொரோனா பிரச்சனை காரணமாக அணைத்து சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்ட நிலையில் 20 நபர்களை வைத்து ஷூட்டிங்கைத் தொடங்கலாமென அரசு அறிவித்திருந்தது. அந்த எண்ணிக்கை போதாது எனத் சீரியல் தயாரிப்பாளர்களான நடிகைகள் ராதிகா, குஷ்பு உள்ளிட்டோர் அரசுக்குக் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து தற்போது 60 பேர் வரை கலந்துகொள்ள அனுமதி கிடைத்தது. இதை தொடர்ந்து சின்னத்திரை படப்பிடிப்புகள் துவங்கப்பட்டது.
சீரியல்களுக்கு 60 பேர் என்றால் படப்பிடிப்புகளை நடத்தி முடித்து விடலாம். ஆனால், 17 போட்டியாளர்கள் மட்டும் வைத்து எடுக்கப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியை எளிதில் எடுத்து முடிக்க முடியாது என்று விளக்கமளித்தள்ளது விஜய் டிவி. வழக்கமாக ஜூன் மாதம் வந்தால் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி விடும். ஆனால், இதுவரை பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் தேர்வு கூட இன்னும் நடக்கவில்லை.
மேலும், இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின் நடுவராக கமல் தான் பங்குபெற போகிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியானது. இருப்பினும் 400 பேர் பணியாற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தற்போது உள்ள சுழலில் நடத்துவது என்பது கடினம் தான். ஏற்கனவே பேட்டி ஒன்றில் பங்கேற்ற கமலஹாசன் இந்த சூழ்நிலையில் சினிமா படப்பிடிப்பில் நடத்துவதும் தியேட்டர்களை திறப்பதும் அவசியமானவை அல்ல என்று தெரிவித்திருந்தார் எனவே டிவி நிர்வாகமே பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த முயற்சித்தாலும் இப்போதைக்கு கமலஹாசன் அதற்கு சம்மதித்து வரமாட்டார் என்று நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கும் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்த சீசன் நடக்குமா நடக்காத என்று ரசிகர்களுக்கு மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள விஜய் டிவி, கண்டிப்பாக பிக் பாஸ் 4 நிகழ்ச்சி நடக்கும். ஆனால், கொரோனா பிரச்சனை காரணமாக அதன் வேலைகள் துவங்கப்படவில்லை. மிகவும் வரவேற்பு பெற்ற ஒரு நிகழ்ச்சியை எப்படி நிறுத்த முடியும். ‘பிக் பாஸ் 4’ இன்னும் பிரம்மாண்டமாகத் திட்டமிட்டு இருக்கிறோம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 400 க்கும் மேற்பட்டோர் வேலை செய்யவேண்டும். தற்போது உள்ள சூழ் நிலையில் அது சாத்தியம் இல்லை. கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் பணிகளைத் தொடங்கவுள்ளோம். எப்போது என்பதை காலம் தான் முடிவு செய்யும். கொரோனா பிரச்சனை முடிந்தவுடன் பிரம்மாண்டமாக அதன் அறிவிப்பை அறிவிப்போம் என்று தெரிவித்திருந்தனர்.