விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி என்று சொல்லலாம். கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் வரும் அக்டோபர் 3 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இதனிடையே இந்த சீசனில் கலந்துகொள்ளப் போவது யார் யார் என்ற லிஸ்ட் அடிக்கடி உலா வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் இந்த சீசனில் பிரபல சினிமா விமர்சகரான அபிஷேக் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
யூடுயூபில் தன்னை ஒரு அதி மேதாவி போல உணர்ந்து கொண்டு பிரபலங்களிடம் அடிக்கடி மொக்கை வாங்கி வரும் சினிமா பையன் என்று தனக்கே செல்லப் பெயர் வைத்துகொண்ட அபிஷேக்கை அறியாத வலைதள வாசிகள் ருக்க முடியாது. அதுவும் இவர் பிரபலங்களை பேட்டி எடுக்கும் போது அவர்களிடம் இவர் கொடுக்கும் ரியாக்ஷன்களில் கண்டு கடுப்பாகத்தவர்கள் இருந்திருக்க மாட்டார்கள்.
இதையும் பாருங்க : மகள் பிறந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில் மகளின் பெயரை அறிவித்த ஆர்யா. (புனிதமான பெயர்)
அது மட்டுமல்லாமல் இவர் அடிக்கடி விஜய் ஆண்டினிடன் பேட்டி எடுக்கும் போது படு பல்ப் வாங்கி இருக்கிறார். அதிலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விஜய் ஆன்டனியின் ‘கோடியில் ஒருவன்’ படம் வெளியாகி இருந்தது. அப்போது இவர் விஜய் ஆண்டனி, ஆத்மீகா மற்றும் படத்தின் இசையமைப்பாளரை பேட்டி எடுத்தார்.
அப்போது இவர் வெயில் படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான ‘வெயிலோடு’ பாடலை பாடினார். இவர் பாடி முடித்ததும் ‘நல்ல குரல் வளம் இருக்கிறது, நல்லா பாடலாம். சரி இவரை பாட வைத்துவிடலாம் ‘ என்று மிகவும் லாவகமாக அபிஷேக்கை கலாய்த்து இருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் படு வைரலாக பரவ பலரும் அபிஷேக்கை கேலி செய்தனர்.
அதே போல கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட அபிஷேக், விஜய் சேதுபதியுடன் இணைந்து கமலை வீடியோ கால் மூலம் பேட்டி கண்டார். அந்த வீடியோவில் இவர் செய்த சேட்டைகளை பலரும் கேலி செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கத்து. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றால் என்ன நடக்கும் என்பதை அடுத்த வாரத்தில் பாப்போம்.