என்ன Wild Card-ல பிக் பாஸ் வீட்டுக்குள் விடுங்க.! அரங்கத்தில் கமலிடம் கேட்ட போட்டியாளரின் அம்மா.!

0
321
kamal

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவதாக வெளியேற்றபடும் நபருக்கான நாமினேஷன் ப்ராசஸ் இந்த வாரம் நடைபெற்றது. இதில் இந்த வாரம் வெளியேற்றபட்ட நபர் யார் என்ற தகவல் ஏற்கனவே நமது வலைதளத்தில் தகவலை வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இன்று(ஆகஸ்ட் 5) ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியின் சில சுவாரசியமான தகவல்கள் கிடைக்கப்பெற்ற வண்ணம் இருக்கிறது.

shariq

இன்றைய (ஆகஸ்ட் 5) பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து 5 வது நபராக ஷாரிக் வெளியேற்றபட்டுள்ளார் என்று ஏற்கனவே அதிகாரபூர்வ தகவல் வெளியாகி இருந்தது. மேலும், இன்றைய நிகழ்ச்சியில் ஷாரிகின் அம்மாவும், நடிகையுமான உமா ரியாஸ் பிக் பாஸ் செட்டிற்குள் சென்றுள்ளார்

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற உமா ரியாஸிடம், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் ஐஸ்வர்யா செய்த சில செயல்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. அப்போது ஐஸ்வர்யா, பாலாஜி மீது குப்பை கொட்டியதை தவறு என்று கூறிய நடிகை உமா ரியாஸ், ஒருவேளை நான் அங்கு இருந்திருந்தால் ஐஸ்வர்யா மீது குப்பையை கொட்டி இருப்பேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் ஷாரிக்கை அழைத்து செல்ல நடிகை உமா ரியாஸ் வந்துள்ளார். அவரிடம் கமல் மேடையில் சில நிமிடங்கள் உரையாடிய போது “என்ன மட்டும் Wild Card-ல விடுங்க சார்,அப்புறம் பாப்பீங்க” என்று கூற அதற்கு கமல்’நீங்க அப்படி பண்ணுவீங்கன்னு தெரிஞ்சி தான் உங்கள கூப்பிடல ‘ என்று கிண்டலாக கூறியுள்ளாராம்.

Shariq-Hassan-With-His-Mother

ஐஸ்வர்யா செய்த சில மோசமான செயல்கள் நடிகை உமா ரியாஸிற்கு எரிச்சலை ஊட்டியுள்ளது.இந்த காரணத்தால்தான் உமா ரியாஸ் கமலிடம் தானாக முன்வந்து என்னை பிக் பாஸ் வீட்டுக்குள் விடுங்க என்று கேட்டுள்ளார்.