அஜித்துடன் 3 படம்.! விஜய்யுடன் ஏன் ஒரு படம் கூட பண்ணல.! யுவன் ஓபன் டாக்

0
340
yuvan-Shankar-Raja

தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா. தனது 16 வது வயதிலேயே இசையமைப்பாளராக திரையுலகிற்கு அறிமுகமான இவர் பல்வேறு ஹிட் பாடல்களை அளித்துள்ளார்.

vijay actor

முன்னணி நட்சத்திரங்களில் பல படங்களுக்கு இசையமைத்துள்ள யுவன், இதுவரை 125 படங்களுக்கு மேல் இணையமைத்துள்ளார். அதே போல தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் படத்திலும் பணியாற்றியுள்ளார் யுவன்.

தமிழில் 2000 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ‘தீனா’ படத்திற்கு இசையமைத்தார் யுவன். அதன் பின்னர் நீண்ட வருடங்களுக்கு பிறகு ‘ஏகன், மங்காத்தா’ போன்ற படைகளுக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற யுவன் பேசுகையில் ”என் இசை வாழ்க்கை தீனா படத்திற்கு பின்னர் தான் மாறியது. அதன் பின்னர் தான் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தது.

Yuvan Shankar Raja

நான் அஜித்துடன் சில படங்களில் பணியாற்றியுள்ளேன். ஆனால், விஜய்யுடன் புதிய கீதை படத்தில் பணிபுரிந்தேன். அதன் பின்னர் விஜய் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். விஜயய்யுடன் பணிபுரியும் வாய்ப்பு விரைவில் அமையும்” என்று கூறியுள்ளார்.

விஜய் நடித்த ‘புதிய கீதை ‘ படத்தில் கூட யுவன்ஷங்கர் ராஜா தனது சகோதரர் கார்த்திக் ராஜாவுடன் இணைந்து தான் இசையமைத்தார். அதன் பின்னர் விஜய் நடித்த எந்த படத்திற்கும் யுவன் இசையமைக்கும் வாய்ப்பு யுவனிற்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது