திருநங்கை ஷிவினா இது ? வைரலாகும் அவரது சிறு வயது புகைப்படம்.

0
970
shivin
- Advertisement -

பத்து வாரங்களைக் கடந்து பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் நாமினேஷனில் ஒருமுறை கூட வராமல் இருக்கும் போட்டியாளரான ஷிவினின் தாய் மற்றும் தந்தை புகைப்படம் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி 67 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி, நிவாஷினி, சிவின் கணேசன், மைனா என 21 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பிக் பாஸ் சீசன் 6:

மேலும், இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ராம், மகேஸ்வரி, ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 10 போட்டியாளர்கள் போக தற்போது 11 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர். இதுவரை பத்து வாரங்களை நிகழ்ச்சி கடந்து இருக்கிறது. போட்டியில் டாஸ்க்கள் எவ்வளவு விறுவிறுப்பாக செல்கிறதோ அதேபோல் நாமினேஷனும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது.

- Advertisement -

ஷிவின் :

அந்த வகையில் பிக் வீட்டில் ஓருமுறை கூடன் எவிக்ஷனில் வராத போட்டியாளர் என்றால் அது திருநங்கையான ஷிவின் கனேசன் தான். இவர் தொடக்கத்தில் பிக் பாஸ் வீட்டில் நுழைந்த போது கடந்த சீசனில் கலந்து கொண்ட நமீதா என்கிற திருநங்கையை போல இவரும் எந்த காரணமும் இல்லாமல் வெளியேறுவாரோ? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் பிக் பாஸ் வீட்டின் எலிமினேஷனில் ஒருமுறை கூட வராமல் 67 நாட்களையும் தாண்டி பிக் பாஸ் வீட்டில் விளையாடி வருகிறார்.

மேலும் இவர் பிக் பாஸ் வீட்டில் பல அவமானங்கள், கிண்டல்களை சந்தித்தாலும் அதை எல்லாம் எதிர்கொண்டு தைரியமாக விளையாடி வருகிறார். இவர் நிகழ்ச்சியில் எல்லா டாஸ்களிலும் வருகிறார். திறமையை வெளிப்படுத்தி தனித்துவமாக தெரிகிறார். அதுமட்டுமில்லாமல் வீட்டில் நடக்கும் பல பிரச்சனைகளில் தலையிட்டு தன்னுடைய நியாயமான கருத்துக்களையும் முன்வைத்து வருகிறார். இதனால் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. மேலும் சிலர் ஷிவின் தான் இந்த சீசனில் வெற்றியாளர் என்றும் கூறுகின்றனர்.

-விளம்பரம்-

ஷிவினின் குடும்பம் :

இந்நிலையில் ஷிவின் திருநங்கையாக மாறியவுடன் இவருடைய விருப்பத்திற்கு வீட்டில் ஆதரவு கொடுக்கவில்லை. இதனால் இவர் வேலை தேடி சிங்கப்பூர் சென்று பணிபுரிந்தார் பின்னர் மீண்டும் இந்தியாவிற்கு வந்தார. ஆனால் மீண்டும் இந்தியாவிற்கு திரும்பி வந்ததை அவர்களுடைய வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் இதுவரை தன்னிடம் பேசாத அம்மா பேசுவார் என்று எதிர்பார்த்து இந்த நிகழ்ச்சியில் சிவின் கணேசன் கலந்து கொண்டு இருக்கிறார்.

குடும்ப புகைப்படம் :

பிக் பாஸ் வீட்டில் கலந்து கொண்டது முதலே ஷிவின் சிறப்பாக விளையாடி வரும் இவரின் தாய் தந்தை என்று ஓரு புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த புகைப்படம் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ள ஒருவரின் புகைப்படம் என்று கூறுகின்றனர். மேலும் ஷிவினுடைய தாய் தந்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்றும் கூறிவருகின்றனர். இந்நிலையில் ஷிவினின் குடும்பம் என்று கருதப்படும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை தெரியாத நிலையில் அந்த புகைப்படமானது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement