இதுவரை இல்லாத அளவு அறிவிக்கப்பட்ட பெட்டித்தொகை – அலேக்காக தூக்கி கொண்டு வெளியேறிய போட்டியாளர். எத்தனை லட்சம் தெரியுமா ?

0
504
biggboss
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி 93 நாட்களை கடந்து மிகவும் பரபரப்பாக என்று கொண்டு இருக்கிறது. 20 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 13 பேர் வெளியேறி இருக்கும் நிலையில் பிரியங்கா, தாமரை செல்வி, ராஜு, பாவனி, சிபி, அமீர், நிரூப் என்று 7 பேர் மட்டுமே உள்ளே இருக்கின்றனர். இதில் Ticket To Finale டாஸ்க்கை வென்று அமீர் நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்டார். இப்படி ஒரு நிலையில் அமீரை தவிர இந்த வாரம் அனைவரும் நாமினேட் ஆகி இருக்கின்றனர். இதனால் இந்த 6 பேரில் யார் வெளியேற போகிறார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

-விளம்பரம்-

படிப் படியாக ஏறிய பணம் :

இந்த சீசன் அடுத்த வாரம் நிறைவடைய இருக்கும் நிலையில் இந்த சீசனுக்கான பணப் பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் 3 லட்ச ரூபாய் பணப் பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டிற்கு சென்று இருந்தார் கமல். மேலும், அந்த மூன்று லட்ச ரூபாய் பணத்தை யாரும் எடுத்துக்கொள்ளவில்லை என்பதால் 5 , 6, 7 என்று படிப்படியாக தொகை ஏறிக்கொண்டே போனது.

- Advertisement -

9 லட்சத்தோடு முடிந்த நேற்றய எபிசோட் :

நேற்றய நிகழ்ச்சி இறுதிவரை பெட்டியில் 9 லட்ச ரூபாய் இருந்தது. ஆனால், அதையும் யாரும் எடுக்கவிலை. இந்த பெட்டியை யார் எடுத்து செல்வார் என்று மிகப்பெரிய கேள்வி நிலவி வந்தது. இந்த சீசனில் டாப் இரண்டு இடத்தில் இருக்கும் ராஜு, பிரியங்கா கண்டிப்பாக இந்த பணப் பெட்டியை எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது .

அதே போல நேற்றய நிகழ்ச்சியில் பணம் 9 லட்சமாக உயர்த்தப்பட்டது. பணப்பெட்டி குறித்த விவாதம் போட்டியாளர்களிடம் நடந்தபோது, பாவனி 25 லட்சம் இருந்தால் எடுக்க யோசிக்கலாம் என்று பேசியிருக்கிறார். பிரியங்கா 15 லட்சம் வந்தால்கூட எடுக்கலாம் என்று பேசியிருக்கிறார். தாமரையோ ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் போக விருப்பமில்லை என்று சொல்லியிருக்கிறார்.

-விளம்பரம்-

பணத்துடன் வெளியேறிய நபர் :

இபப்டி ஒரு நிலையில் பணப் பெட்டியை சிபி எடுத்துக்கொண்டு வெளியேறி இருக்கின்றார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதுவும் அவர் 12 லட்ச ரூபாய் பணத்துடன் வெளியேறி இருக்கிறார். தான் இறுதி போட்டி வரை செல்வேன். கடைசி நான் தோற்றுவிடுவேன் என்று எப்போதும் நான் நினைக்க மாட்டேன். எனக்கு என் மீது நம்பிக்கை இருக்கிறது என்று சொன்ன சிபி தற்போது பணப்பெட்டியை எடுத்து சென்று இருப்பது மிகுந்த ஆச்சரியமே.

கடந்த இரண்டு சீசனில் கொடுக்கப்பட்ட தொகை :

கடந்த இரண்டு சீசனிலும் 5 லட்ச ரூபாய் தான் பெட்டி தொகையாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சீசனில் 5 லட்ச ரூபாபாயை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் கேபி. மேலும் அதற்க்கு முந்தய சீசனில் கவின் 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார். அந்த சீஸனின் டைட்டில் வின்னராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கவின் பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

Advertisement