இசை வெளியீட்டு விழாவிற்கு என்னை கூப்பிடவே இல்லை என்று விருமன் பட பிரபலம் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. இவர் பழம்பெரும் நடிகர் சிவக்குமாரின் மகன் மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தி அவர்கள் 2007-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த ‘பருத்தி வீரன்’ படம் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து இவர் அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று இருக்கிறது. தற்போது இவர் முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். குட்டிப் புலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா.
முத்தையா- கார்த்தி கூட்டணி:
அதனைத் மூலம் இவர் கொம்பன், மருது, தேவராட்டம், புலிகுத்தி பாண்டி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார். பெரும்பாலும் இவர் இயக்கிய படங்கள் எல்லாம் கிராமத்து பாணியில் இருக்கும். அதே போல் விருமன் படமும் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி இருக்கிறது. மேலும், இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
விருமன் படம்:
இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக புதுமுக நடிகை அதிதி சங்கர் நடிக்கிறார். இவர் வேற யாரும் இல்லைங்க, பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இளைய மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
இசை வெளியீட்டு விழா :
சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. இதில் கார்த்திக், சூர்யா, அதிதி உட்பட படக்குழுவினர் கலந்துக் கொண்டு சிறப்பித்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் என்னை அழைக்கவே இல்லை என்று சினேகன் அளித்திருந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தில் பாடல் ஆசிரியராக பணிபுரிந்து இருக்கிறார் சினேகன். அவர் இந்த படத்தில் வானம் கிடுகிடுங்க என்ற பாடலை எழுதி இருக்கிறார்.
சினேகன் கூறியது:
ஆனால், இவர் விருமன் பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளவில்லை. இது குறித்து சமீபத்தில் நடந்த சினிமா விழாவில் சினேகன் கூறியிருந்தது, விருமன் படத்தில் பாடல் ஆசிரியராகப் பணிபுரிந்தேன். ஆனால், அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு எனக்கு அழைப்பிதழ் கூட தரவில்லை. இன்னும் சில காலத்தில் பாடலாசிரியர் என்ற இடமே இல்லாமல் போய்விடும் போலிருக்கிறது என்று மனவேதனையுடன் கூறியிருந்தார். இப்படி இவர் பேசியிருந்தது கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.