பிக் பாஸ் வீட்டில் இருந்த வரைக்கும் பாலாக்கு சப்போர்ட் பண்ணிட்டு. இப்போ ஆரி தான் ஜெயிக்கனுன்னு சொல்றாங்க இவங்க.

0
4065
BB
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இன்றோடு (ஜனவரி 17) நிறைவடைய இருக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் இறுதி போட்டி 6 மணி நேரம் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத் ஆகிய என்று 11 பேர் வெளியேறினர்.

-விளம்பரம்-

இந்த சீசனில் சோம் சேகர் Ticket to finale டாஸ்க்கை வென்று நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் ஆரி, பாலாஜி, ரியோ, ரம்யா, கேப்ரில்லா என்று மொத்தம் 6 பேர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் கேப்ரில்லா 5 லட்சம் பணத்தோடு வெளியேறினார். இதனால் இறுதி போட்டிக்கு 5 பேர் மட்டும் சென்றனர். இறுதிப்போட்டிக்கு தகுதி ஆகியுள்ள நிலையில் யார் டைட்டிலை வெல்வார் என்பதற்கான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.. ஆனால், இந்த சீசனில் ஆரி தான் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர்.

இதையும் பாருங்க : முதல் இடத்திற்கு போட்டியே இல்லை. இரண்டாம் இடத்திற்கான போட்டியில் வென்றது இவருதான்.

- Advertisement -

எனவே, இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடிக்கப்போவது யார் என்பது தான் போட்டியே. அதே போல இரண்டாம் இடத்தை பாலாஜியும் மூன்றாம் இடத்தை ரியோவும் பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் ஆரி வெற்றியாளர் என்று சமூக வலைதளத்தில் பலரும் கொண்டாடி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் கலந்துகொண்டு வெளியேறிய சுசித்ரா, ஆரிக்கு ஆதரவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ஆரி மட்டும் டைட்டில் ஜெயிக்கலன்னா அது மிகப்பெரிய அநியாயம். நீங்க அவரின் ரசிகரோ இல்லையோ தயசு செஞ்சி அவருக்கு ஓட்டு போடுங்க. நிஜ வாழ்க்கையின் ஹீரோ.மேலும், ஆரிக்கு தன்னுடைய 50 வாக்குகளையும் அளித்துவிட்டதாகவும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் சுச்சி. பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை பாலாஜிக்கு பக்க பலமாக அவர் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டிய சுச்சி தற்போது ஆரிக்கு வாக்களித்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement