தன்னிடம் காதலை சொன்ன நபரை, செருப்பால் அடிப்பேன் என்று திட்டிய பிக் பாஸ் சுஜா..! அடுத்தது என்ன பண்ண போறாங்க பாருங்க…!

0
1008
- Advertisement -

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் பிரபலமடைந்தவர் சுஜா வருணி. தமிழ் சினிமாவில் நடன கலைஞராக இருந்த இவர் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இவர் விரைவில் நடிகர் திலகம் சிவாஜி வீட்டின் மருமகளாக ஆகப்போகிறார் என்ற தகவல் பரவி வந்தது.

-விளம்பரம்-

suja

- Advertisement -

தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் வெங்கடேஷ் இயக்கிய “சிங்கக்குட்டி” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவாஜி தேவ் . அந்த படத்திற்கு பின்னர் “புதுமுகங்கள் தேவை”, “இதுவும் கடந்து போகும்” போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும், நடிகை சுஜா வருணி, சிவாஜி தேவ்வை காதலித்து வருகிறார் என்று சில தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

நடிகை சுஜா வருணிக்கும், சிவகுமாருக்கும் ஏற்கனவே நிட்சயதார்த்தாம் நடைபெற்றதாகவும் தகவல்கல் வெளியான நிலையில் தனது காதலர் சுஜாவின் பிறந்த நாள் சர்ப்ரைஸாக திருமண தேதியை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் சிவகுமார். இருவரது திருமணமும் அடுத்த மாதம் நவம்பர் 19-ம் தேதி ஆம் தேதி நடைபெற உள்ளது.

-விளம்பரம்-

Suja

சமீபத்தில் தனது காதலி சுஜா குறித்து பேசியுள்ள சிவகுமார், என் அம்மாவே இன்னோர் உருவமா சுஜா மூலமா கிடைச்ச உணர்வு. அம்மா எப்படி என்னைப் பார்த்துக்கிட்டாங்களோ அதே கேரிங்கை சுஜாகிட்டேயும் பார்த்தேன். நான்தான் முதல்ல லவ் ப்ரபோஸ் பண்ணினேன்.நான் லவ்வைச் சொன்னதும், `செருப்பு பிஞ்சிடும்’னு திட்டிப் போனை வெச்சுட்டாங்க. அவங்களுக்கும் என்கிட்ட பேசாம இருக்க முடியலை.

நான் பேசவும் அவங்களும் பேசிட்டாங்க. மறுபடியும் லவ் ப்ரபோஸ் பண்ணினேன். உடனே ஓகே சொல்லிட்டாங்க. 5 வருஷத்துக்கு முன்னாடி பிரேக்அப் லெவலுக்குப் போயிட்டோம். 8 மாசம் பேசாமலேயே இருந்தோம். அப்புறம் சமாதானம் ஆகிட்டோம் இப்போ கல்யாணம் பண்ண போறோம் இப்படித்தாங்க எங்க காதல் ஆரம்பிச்சது. என்று கூறியுள்ளார் சிவகுமார்.

Advertisement