என்னதான் சினிமாவில் நவீன காலம் தொடர்பாக திரைப்படங்கள் வந்தாலும் தற்போதைய நிலையில் சினிமா ரசிகர் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தமிழ் ரசிகர்கள் அனைவரும் வரலாற்று படங்களையும், உண்மை கதைகள் போன்று கதை களத்துடன் இருக்கும் படங்கள வெற்றி படமாக மாற்றுகின்றனர். அந்த வகையில் உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன்,ஆண்ட்ரியா,ரீமாசென் இவர்களின் நடிப்பில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியான சமயத்தில் வந்ததும் தெரியாது போனதும் தெரியாது என்ற அளவில் தான் இருந்தது. ஆனால் படம் வெளிவந்து பத்து வருடங்கள் கழித்து ரீ-ரீலிஸ் செய்த போது ரசிகர்களின் சிரியான தீனி போட்டதே என்று சொல்லலாம். இதே மாதிரியான கதை களத்துடன் விரைவில் திரைக்கு வர உள்ள படம் தான் பொன்னியின் செல்வன் இந்தப் படத்திற்காக பெருமளவிலான ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பொன்னியின் செல்வன் திரிஷா :-
40 வருடங்களுக்கு மேல் தென்னிந்திய திரை உலகில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறவர் நடிகை திரிஷா. இவர் சமீப காலங்களில் எந்தவிதமான படங்களில் பெரிய அளவில் நடிக்கவில்லை. ஆனால் தற்பொழுது சமீபத்தில் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் இந்த கதையின் முக்கிய கதாபத்திரமான நந்தினி கதாபாத்திரமாக ஐஸ்வர்யா ராயும் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் த்ரிஷாவும் நடித்திருக்கின்றனர்.இந்த இரு கதாபாத்திரங்களின் புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டனர்.அதில் திரிசாவின் புகைப்படம் தமிழ் ரசிகர்களிடம் பெரிதும் பாராட்டுக்குரிய ஒன்றாக இருந்தது. இந்த புகைப்படம் வெளிவந்த சில மணி நேரங்களிலேயே மிகவும் வைரலானது பெரும்பாலான ரசிகர்கள் த்ரிஷாவின் இந்த கதாபாத்திரம் நிச்சயமாக பட்டையை கிளப்பும் என்றும் அவர் கருத்துகளை தெரிவித்து வருகின்றன இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 5 இன் போட்டியாளரான சுருதி அச்சு அசலாக த்ரிஷாவை போல போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார்.
சுருதியின் ஆரம்பகால வாழ்க்கை :-
சுருதியின் அம்மா அவருடைய அப்பாவுக்கு இரண்டாவது மனைவி ஆவார் பொதுவாக நாம் படங்களில் கணவருடைய இரண்டாவது மனைவி முதல் மனைவியின் பிள்ளைகளை வெறுத்து ஒதுக்குவது போல் பார்த்திருப்போம். ஆனால் ஸ்ருதியின் வாழ்க்கை அப்படியே தலைகீழானது சுருதி அவளின் அப்பாவின் இரண்டாவது மனைவிக்கு பிறந்தநாள் அவர் அப்பாவின் வெறுப்பை மட்டுமே சம்பாதித்தார் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் கண்ணீர் மல்க தன் கதையை கூறினார்.சுருதி பள்ளியில் படிக்கும் போது கூடை பந்தின் மீது இருந்த ஆர்வத்தால் கூடைப்பந்து பிளேயராக இருந்தார் பள்ளி படிப்பை முடித்தவுடன் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் கல்லூரியில் சேர்ந்து படித்தார். சுருதி கல்லூரி படிப்பை முடித்தவுடன் அவர் படித்ததற்கு ஏற்ப வேலையை பார்த்துக் கொண்டு தன் அம்மாவையும் குடும்பத்தையும் நடத்திக் கொண்டிருந்தார்.
மாடலிங் துறையில் நுழைந்த சுருதி :-
என் நிலையில் சுருதியின் தோழி ஒருவர் மாடலிங் துறையில் நல்ல நிலைமையில் இருந்தார் அப்படியாக இருந்த நிலையில். அவரது தோழியுடன் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோஸ்ட் அன்றைய நாளில் வராத காரணத்தினால் அவரது தோழி வற்புறுத்தலின் காரணமாக அந்த நிகழ்ச்சியை கோஸ்ட் செய்து வழங்கினார். அவரது கோஸ்ட் செய்து வழங்கிய விதம் தமிழ் பேசும் முறையும் இனிமையாக இருந்ததால் அங்கிருந்தவர்களால் கைதட்டி, ஆரவாரம் செய்து சுருதி பாராட்டினார்கள் இப்படியாக மாடலிங் துறைக்குள் நுழைந்த சுருதி இதையே தன் ப்ரொபஷனாக மாற்றிக்கொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வாய்ப்பு :-
மாடலிங் துறையில் என்ட்ரி கொடுத்து சுருதி பல போட்டோ ஷுட்டுகளை நடத்தி இணையங்களில் அவரது புகைப்படம் வெளியாகி வந்தது அந்த புகைப்படங்கள் பெருமளவில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வைரலானது. இதைத் தொடர்ந்து ஒரு தனியார் நிறுவனம் லட்சுமி அம்மன் தமிழர்களுக்கே உண்டான கருப்பு நிற சாயலில் இருந்தால் எப்படி இருக்கும் என்ற யோசனையில் சுருதியை வைத்து போட்டோ சூட் நடத்தியது. அதன் பலனாக அந்த போட்டோ சூட் இணையத்தில் மறுபடியும் வைரல் ஆனது தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுருதி போட்டியாளராக இடம் பெறுவதற்கு ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட மூன்றாவது வாரத்திலேயே சுருதி வெளியேறப்பட்டார். அதன் பின்பு பிக் பாஸ் அல்டிமேட் என்ற ஓடிடி தளத்தில் வெளியான நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
திரிஷாவை போல போட்டோ ஷுட் :-
இப்படியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலமாக மக்கள் அனைவருக்கும் பரிச்சயமான முகமாக மாறிய சுருதி சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை பிராட்டி கதாபாத்திரத்தில் ஏற்று நடிக்கும் திரிசாவின் புகைப்படங்களை மாதிரியாக வைத்துக்கொண்டு அதே மாதிரியான ஹேர்-ஸ்டைல், முகபாவனை, ஆபரணங்கள், உடைகளை உடுத்திக்கொண்டு போட்டோஷூட் ஒன்றை நடத்தினார். அதன்பின்பு அந்த புகைப்படங்களை குந்தவை கதாபாத்திரத்தில் இருந்த திரிஷாவின் புகைப்படத்தை போல எடிட் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது. இதன் மூலம் இவருக்கு பல வாய்ப்புகள் தேடி வரும் என்று கருதப்படுகிறது.