இறுதி போட்டிக்கு நுழைந்த நிரூப், டேஞ்சர் கட்டத்தில் இருந்த பாவனி – தாமரை இருவரில் வெளியேறியது யார் தெரியுமா ?

0
515
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி 95 நாட்களை கடந்து மிகவும் பரபரப்பாக என்று கொண்டு இருக்கிறது. 20 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 13 பேர் வெளியேறி இருக்கும் நிலையில் இந்த வாரம் பிரியங்கா, தாமரை செல்வி, ராஜு, பாவனி, அமீர், நிரூப் என்று 7 பேர் மட்டுமே உள்ளே இருந்தனர். இதில் Ticket To Finale டாஸ்க்கை வென்று அமீர் நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்டார். இப்படி ஒரு நிலையில் அமீரை தவிர இந்த வாரம் அனைவரும் நாமினேட் ஆகி இருந்தனர். இதனால் இந்த 6 பேரில் யார் வெளியேற போகிறார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

-விளம்பரம்-

12 லட்சத்துடன் வெளியேறிய சிபி :

இந்த சீசன் அடுத்த வாரம் நிறைவடைய இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த சீசனுக்கான பணப் பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் 12 லட்ச ரூபாய் பணத்துடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார் சிபி. சிபி வெளியேறியதால் இந்த வார நாமினேஷனில் பிரியங்கா, ராஜு, தாமரை, நிரூப், பாவனி ஆகிய 5 பேர் மட்டும் தொடர்ந்தனர்.

- Advertisement -

ஏமாந்த பாவனி :

இப்படி ஒரு நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக போட்டியாளர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு பொறியாளரை நேரடியாக இறுதி வாரத்திற்கு அனுப்பி வைக்கலாம் என்று கூறப்பட்டது. இதில் ஆரம்பத்தில் பாவனியை அனைவரும் முடிவு செய்தனர். ஆனால், அதற்கு போட்டியாளர்கள் சொன்ன காரணம் ஏற்க முடியவில்லை என்று பிக் பாஸ் அதனை மறுத்துவிட்டார்.

நேரடியாக இறுதி போட்டிக்கு சென்ற நிரூப் :

பின்னர் பல மணி நேர பேச்சு வார்த்தைக்கு பின்னர் நிரூப்பை பைனலுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், தாமரையை தவிர மற்ற யாரும் நிரூப்பை மனதார பைனலுக்கு அனுப்பி வைக்கவில்லை. இதன் மூலம் நிரூப் இறுதி போட்டிக்கு செல்லும் இரண்டாம் போட்டியாளரானார். இதன் மூலம் இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்தார் நிரூப். இதை தொடர்ந்து இந்த வார நாமினேஷனில் ராஜு, பிரியங்கா, தாமரை, பாவனி மட்டும் இருந்தனர்.

-விளம்பரம்-

எலிமினேஷன் விளும்பில் நின்ற பாவனி – தாமரை :

இதில் கண்டிப்பாக ராஜு மற்றும் நிரூப் காப்பாற்றப்பட்டு விடுவார்கள் என்று அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். இதனால் பாவனி அல்லது தாமரை ஆகிய இருவரில் தான் யாராவது வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாமரை வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதிலும் பாவனி – தாமரை இருவருக்கும் மிகவும் குறைந்த வாக்கு வித்யாசம் தான் இருந்ததாக கூறப்படுகிறது.

This image has an empty alt attribute; its file name is image-29.png

வெளியேறிய தாமரை :

இந்த தகவல் ரசிகர்கள் எதிர்பார்த்த ஒன்று தான். மேலும், தாமரை பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறி இருக்கலாம் என்று பலரும் கூறி வருகின்றனர். உன்மையில் சொல்லப்போனால் தாமரை இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விஷயம் தான். இருப்பினும் தாமரை பணப்பெட்டியை எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிட்டு தற்போது வெறும் கையோடு பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறி இருப்பது அவருக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்து இருக்கும்.

Advertisement