போன வருஷம் இப்படி தான பண்ணாங்க, அப்படிலாம் நான் இருக்க மாட்டேன் – அன்பு கேங் குறித்து பிரியங்கா.

0
5252
priyanka
- Advertisement -

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதுவும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. வருடம் வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் ஆரவாரமுடன் இருப்பார்கள். அந்த வகையில் தற்போது நான்கு சீசன்களை கடந்து பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் கோலாகலமாக தொடங்கியது. இந்த சீசனில் 18 போட்டியாளர்களுடன், பல மாற்றங்களுடன் நிகழ்ச்சி தொடங்கி உள்ளது.

-விளம்பரம்-

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ள தொகுப்பாளினி பிரியங்கா இன்னொரு அர்ச்சனாவாக இருப்பாரோ என்று சோஷியல் மீடியாவில் கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளன. தொகுப்பாளினி அர்ச்சனாவை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுஇருந்தது அனைவருக்கும் தெரிந்ததே.

இதையும் பாருங்க : குறும்படத்தில் செமயான லிப் லாக் காட்சியில் நடித்துள்ள அக்ஷரா – ரசிகர்களை ஷாக்காக்கியா வீடியோ.

- Advertisement -

நிகழ்ச்சியில் அர்ச்சனா, நிஷா இவர்கள் எல்லாம் ஒரு கேங்க் சேர்ந்து அன்பு ஜெயிக்கும் என்று சொல்லியிருந்தது குறித்து சோஷியல் மீடியாவில் பல கிண்டலும் கேலியும் எழுந்தது. அதிலும் அன்பு என்ற பெயரில் அர்ச்சனா பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தவுடன் கேங்க் சேர்த்தார். பின்பு அதுவே அவர்களுக்கு பிரச்சனையாக மாறியது. அர்ச்சனாவின் கேங்கில் இருந்த யாருமே கடைசிவரை பைனலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் கேங்க் உருவாகி வருகிறது. அதாவது பிரியங்காவும் அர்ச்சனை போல் அன்பு தான் எல்லாம் என்று சொல்லிக் கொண்டு திரிகிறார். பிரியங்கா, அபிஷேக்,நிரூப் ஆகிய மூணு பேரும் சேர்ந்து கொண்டு மற்றவர்களை டார்கெட் செய்து வருகிறார்கள். அதிலும் பிரியங்கா குறிப்பாக அக்ஷராவை டார்கெட் செய்வது அப்பட்டமாக தெரிகிறது.இப்படி ஒரு நிலையில் Unseen வீடியோ ஒன்றில் பிரியங்கா போன சீசனனில் இருந்த அன்பு கேங் மாதிரி நான் இருக்க மாட்டேன் என்று பேசி இருக்கிறார். ஆனால், பிரியங்கா இன்னொரு அர்ச்சனாவாக இருப்பாரா? என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

-விளம்பரம்-
Advertisement