விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி 56 நாட்களை கடந்து பயங்கர விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்திலிருந்து இன்று வரை ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் முகம் தெரிந்த நபர்களை விட தெரியாத நபர்கள் தான் அதிகம் கலந்து கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள்.
18 பேருடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 8 பேர் எலிமினேட் ஆகி தற்போது மூன்று பேர் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக வந்து இருக்கிறார்கள். இரண்டாவது எலிமினேட் ஆன அபிஷேக் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதே போல அமீர் என்ற டான்ஸ் மாஸ்டருக்கும் என்ட்ரி கொடுத்து இருந்தார்.
இவரை தொடர்ந்து சஞ்சீவ், பிக் பாஸ் வீட்டில் மூன்றாவது வைல்டு கார்டு போட்டியாளராக என்ட்ரி கொடுத்தார். நடிகர் சஞ்சீவ் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை, இவர் விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான்.நடிகர் சஞ்சீவ் 1989 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான பொன்மனச் செல்வன் என்ற படத்தில் அறிமுகமானார் அதன்பின்னர் சந்திரலேகா நிலாவே வா பத்ரி போன்ற பல்வேறு படங்களில் துணை நடிகராக நடித்து இருந்தார்
சினிமா மட்டுமல்லாது இவர் சின்னத்திரையிலும் பிரபலம் தான். ஆனால், நடிகர் சஞ்சீவ் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரின் நெருங்கிய சொந்தக்காரார். ஆம், நடிகர் சஞ்சீவ், வனிதாவிற்கு மிகவும் நெருங்கிய சொந்தக்காரர் என்பது பலரும் அறிந்திராத ஒரு விஷயம். எப்படியெனில் வனிதாவின் அம்மாவான மறைந்த நடிகை மஞ்சுளாவின் சகோதரி யின் மகன் தான் சஞ்சீவ். ஆனால், இதுவரை இதை அடிக்கடி சஞ்சீவ் எங்கேயும் சொன்னது இல்லை.