சைக்கோ கணவர், எனக்கு திருமணம் ஆகிடுச்சு.! நேற்று ஒளிபரப்பபடாதா வீடியோவில் மீரா கொடுத்த ஷாக்.!

0
22457
Meera-Mithun
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த மூன்று நாட்களாகவே மீரா மிதுனின் பிரச்சனை தான் ஹைலைட்டாக இருந்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாக இவர் அழகி போட்டி நடத்துவதாக கூறி பலரை மோசடி செய்ததாக தகவல்கள் வெளியாகின.

-விளம்பரம்-

அதே போல மீரா மிதுன் அழகி என்ற பெயரில் பல்வேறு மோசடிகளை செய்துள்ளார் என்று கேரளாவை சேர்ந்த ஜோ மைக்கேல் என்ற நபர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேட்டி அளித்த ஜோ மைக்கேல், மீரா மிதுன் மீது பல்வேறு மோசடி வழக்குகள் இருக்கிறது.

இதையும் பாருங்க : முதன் முறையாக மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட கணேஷ்.! 

- Advertisement -

அதிலும் ஜோ மைக்கேல் தான் மீரா குறித்த பல ஷாக்கிங் உண்மைகளை கூறி வருகிறார். அவர் கூறிய மிக முக்கியமான குற்றசாட்டில் மீரா மிதுனுக்கு திருமணம் முடிந்து விவாகரத்தும் ஆகிவிட்டது என்பது தான். இந்த நிலையில் தனக்கு திருமணம் முடிந்து விவாகரத்தும் ஆகிவிட்டதை முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளார் மீரா மிதுன்.

நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீரா மிதுன் பேகையில் மனைவி அல்லது கணவர் பற்றி சொல்லுங்கள் என்று டாஸ்க் வந்தது. அப்போது பேசிய மீரா மிதுன், 5 வருடத்திற்கு முன்னர் என்னுடைய அப்பா எனக்கு ஒருவரை பார்த்து திருமணம் செய்து வைத்தார். அனால், திருமணம் முடிந்து சில நாட்கள் கழித்து தான் அவன் ஒரு சைக்கோ என்று தெரிந்தது.

-விளம்பரம்-

இப்படி ஒருவரை எனக்கு திருமணம் செய்துவிட்டோமே என்று அப்பா மிகவும் சங்கடமடைந்தார். அந்த திருமணம் சட்டபடி பதிவு செய்யபடாததால் எனக்கு என்னுடைய அப்பா, என் கணவரை பிறந்ததும் மூன்று சாய்ஸ் கொடுத்தார். ஒன்று வெளிநாடு சென்று படி இல்லை இதை அனைத்தையும் மறந்துவிடு. இது ரெண்டும் இல்லனா உன் இஷ்டம் என்று கூறிவிட்டார்.

ஆனால் நான் என் கணவருகாக காத்திருப்பதாக சொன்னேன். ஒரு முறை என் பிறந்தநாளன்று நானே அவர் வேலை செய்யும் இடத்திற்கு சென்றேன். பின்னர் நான் பேசிகொண்டே இருக்கும் போது என்னை அவர் அறைந்துவிட்டார். அவர் அடித்தும் எனக்கு ரத்தம் வந்து விட்டது பின்னர் இரவு 2 மணிக்கு அந்த இடத்தில் இருந்து ஆட்டோவில் வீட்டுக்கு வந்து விட்டேன். என் கணவர் குறித்து நான் ரொம்ப ஆசையாக இருந்தேன் ஆனால், இப்படி ஆகிவிட்டது. அந்த சம்பவத்திற்கு பின்னர் யார் மீதும் எனக்கு எந்த எண்ணமும் வரவில்லை என்று கண்ணீர் மல்க கூறினார். மீரா மிதுன் தனது திருமணம் குறித்து பேசியதை நேற்றைய (ஜூன் 29) எபிசோடில் 41 நிமிடத்தில் நீங்கள் காணலாம்.

Advertisement