வைட்டிங் லிஸ்டில் இருந்த 5 பேரில் காப்பாற்றப்பட்ட 3 பேர் – இறுதியில் இருந்த 2 பேரில் வெளியேறியது இவர் தான்.

0
4423
Bigg Boss
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் 2 வாரத்தை நிறைவு செய்திருக்கிறது. முதல் வாரத்தில் எந்த ஒரு நாமினேஷனும் இல்லாத நிலையில் கடந்த வாரம் முதல் நாமினேஷன் நடைபெற்றது. இதில் தாமரைச்செல்வி மற்றும் பாவணி ஆகிய இருவரைத் தவிர மற்ற அனைவருமே நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம் நாடியா பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார். இப்படி ஒரு நிலையில் இந்த வாரத்தின் இரண்டாம் வாரத்தில் 9 பேர் நாமினேட் ஆகி இருந்தனர்.

-விளம்பரம்-

இதில் அபிஷேக்ககை தான் அதிகபட்சமாக 6 பேர் நாமினேட் ஆகி இருந்தனர். கடந்த வாரம் கூட அபிஷேக் நாமினேட் ஆகி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த வாரமே இவர் வெளியேறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் நாடியா வெளியேறி இருந்தார். இதில் கவனிக்கப்பட விஷயம் என்னவென்றால் நாடியாவை அந்த வாரம் அபிஷேக் ஒருவர் மட்டும் தான் நாமினேஷ் செய்து இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

இதையும் பாருங்க : அர்ஜுனின் நிச்சயதார்த்த புகைப்படம், அவர் மடியில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா ? அவரும் பிரபல நடிகர் தான்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் இந்த வாரம் நாமினேட் ஆன 9 பேரில் அக்ஷரா, பாவனி, இசைவாணி, தாமரை செல்வி ஆகிய 4 பேர் காப்பாற்றப்பட்டு இருந்தனர். இதில் மீதம் அபிநய், ஐக்கி பெர்ரி, அபிஷேக், பிரியங்கா, சின்ன பொண்ணு ஆகிய 5 பேர் முடிவிற்க்காக காத்துகொண்டு இருந்தனர். யார் வெளியேறுவார் என்று எதிர்பார்த்துக்கொண்டு இருந்த நிலையில் இந்த வாரம் அபிஷேக் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

இன்று வெளியான முதல் ப்ரோமோவை வைத்து பார்க்கும் போது இன்று பிரியங்கா மற்றும் அபிநய் காப்பாற்றப்பட்டு இருப்பது போல தெரிகிறது. முதல் ப்ரோமோவில் சின்ன பொண்ணு, ஐக்கி பெர்ரி, அபிஷேக் ஆகிய மூவர் மட்டும் முடிவிற்காக காத்துக்கொண்டு இருக்கின்றனர். இதில் ஐக்கி பெரி காப்பாற்றப்பட்டுவிட்டதாக கமல் அறிவித்தார். இறுதியில் அபிஷேக், சின்ன பொண்ணு ஆகிய இருவரில் அபிஷேக் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement