இந்த ரவீனா பண்றது சுத்தமா புடிக்கல – ரவீனா மீது காண்டான ஐஷூ.

0
204
Mani
- Advertisement -

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது மூன்று வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது. இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

முதல் வாரமே நிகழ்ச்சி விறுவிறுப்பாகவும் கலவரமாகவும் சென்றிருந்தது. முதல் வாரம் எவிக்சன் நடக்காது என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேறி இருந்தார்.பின் பவா, தன்னால் இனி நிகழ்ச்சியில் விளையாட முடியாது என்று தாமாகவே வெளியேறிவிட்டார். தற்போது 16 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

- Advertisement -

மேலும், கடந்த வாரத்திற்கான நாமினேஷனில் நிக்சன்,அக்ஷயா,மணி சித்ரா, ஐசு,விஜய், மாயா, பூர்ணிமா, வினுஷா,விக்ரம் மற்றும் பிரதீப் ஆகிய 11 பேர் நாமினேட் ஆகி இருந்தனர். இதில் மாயா அல்லது பூர்ணிமா ஆகிய இருவரில் யாராவது வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக விஜய் வர்மா வெளியேற்றப்பட்டு இருந்தார். அதே இந்த வாரம் பூர்ணிமா கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பூர்ணிமா ஸ்மால் பாஸிற்கு செல்லும் நபர்களை தேர்ந்தெடுத்தார். அதில் பரதீப், ஜோவிகா, யுகேந்திரன், மணி, நிக்சன் மற்றும் அக்ஷயா ஆகியோரை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இப்படி ஒரு நிலையில் இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோ ரவீனாவை பற்றி புலம்பி தள்ளி இருக்கிறார் ஐசு.

-விளம்பரம்-

இது ஒருபுறம் இருக்க சமீபத்தில் வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் Wild card குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வழக்கமாக பிக் பாஸ் சீசன்களில் ஒன்று அல்லது இரண்டு Wild card போட்டியாளர்கள் தான் வருவார்கள். ஆனால் இந்த முறை 5 Wild கார்ட் போட்டியாளர்கள் வர இருக்கின்றனர். எனவே இந்த வாரம் Double Eviction இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், அந்த 5 Wild Card போட்டியாளர்களில் முதல் இரண்டு Wild Card போட்டியாளர்கள் பெயர் வெளியாகி இருக்கிறது.

அதில் ஒன்றி ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா மற்றும் ஒரு போட்டியாளர் பின்னணி பாடகர் கானா பாலா ஆகியோர் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மற்ற மூன்று பேர் யார் என்ற விவரம் தெரியவில்லை. மேலும், Wild card போட்டியாளர்கள் ஐந்து பேரும் இந்த வாரமே என்ட்ரியாக இருக்கின்றனர் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Advertisement