விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது இரண்டு வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் கலந்துகொண்டனர்.இதில் முதல் வாரத்தில் அனன்யா வெளியேற்றப்பட்ட நிலையில் அடுத்தே நாளே பவா செல்லத்துரை இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
மேலும் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் அக்ஷயா, விசித்ரா, ஜோவிகா, பூர்ணிமா விஷ்ணு, மாயா, பிரதீப் ஆகியோர் நாமினேட் ஆகிருக்கிறார்கள். இந்த வாரம் அனைவரும் எதிர்பார்த்த மாயாவின் பெயர் இடம் பெற்று இருந்தது. எனவே அவர் தான் இந்த வாரம் வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் பவா செல்லத்துரை வெளியேறியதால் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
நேற்றய நிகழ்ச்சியில் இந்த வார தலைவராக யுகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அவர் கேப்டனாக தேர்ந்தெடுக்கட்டதும் வாரம் முழுக்க ஈடுபாடு இல்லாமல் சுவாரசியம் குறைவாக திகழ்ந்த போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து ஸ்மால் பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்புமாறு பிக் பாஸ் கூறினார். அதன்படி மாயா, பிரதீப், விஷ்ணு,பூர்ணிமா, விக்ரம், வினுஷா ஆகியோரை யுகேந்திரன் தேர்தெடுத்தார்.
நேற்றய நிகழ்ச்சியில் கடந்து வந்த டாஸ்க் துவங்கப்பட்டு இருந்தது. அதில் அனைவரும் தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து பேசி இருந்தார்கள். இறுதியில் அக்ஷயா சொன்ன கதையை மற்ற ஹவுஸ் மேட்ஸ்கள் தேர்ந்தெடுத்து அவருக்கு ஸ்டாரை அளித்தனர். இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பிக் பாஸ் சாபக்கல் ஒன்றை வழங்கி இருக்கிறார். இந்த கல் யாருக்கும் கொடுக்கப்படுகிறதோ அவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்படுவர்.
மேலும், அடுத்த வாரம் நடைபெறும் நாமினேஷனில் அவர்கள் நேரடியாக நாமினேட் செய்யப்படுவார் என்று அறிவிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து போட்டியாளர்கள் அனைவருமே கூல் சுரேஷின் பெயரை ஒருமனதாக கூறினார்கள். இதனால் கடுப்பான கூல் சுரேஷ், உங்களுக்கு ஒரு இளிச்ச வாயன் வேனும் அதுக்கு நீங்க என்ன சொல்லுவீங்க, ஏமாந்த ஆளு என்ன மட்டும் வச்சி செய்ங்க என்று கடுப்பாகி இருக்கிறார்.
இதனை தொடர்ந்து வெளியான இரண்டாம் ப்ரோமோவில் விசித்திரா மற்றும் கூல் சுரேஷ் இருவரும் மற்ற போட்டியாளர்கள் பற்றி பேசிக்கொண்டு இருந்தனர். இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் மூன்றாம் ப்ரோமோவில் நீண்ட நாட்கள் ஸ்மால் பாஸ் நபர்கள் பிக் பாஸ் நபர்கள் பற்றி பேசி இருக்கின்றனர். அப்போது கூல் சுரேஷை பற்றி பூர்ணிமா பேச ‘விளையாடும் போது நல்ல விளையாடிட்டு இப்போ பல்டி அடிக்கிற என்று பதிலடி கொடுத்துள்ளார்.