பிக்பாஸ் தமிழ் சீசன் 7 அப்டேட் : ஆடிஷனில் கலந்து கொண்ட விஜய் டிவி பிரபலங்கள்

0
1959
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள இருக்கும் பிரபலங்கள் குறித்த தகவல் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை முதன்முதலில் இந்தியில் தான் அறிமுகப்படுத்தியிருந்தார்கள். ஆனால், இந்த நிகழ்ச்சியின் முன்னோடி நெதர்லாந்த் சேர்ந்த “பிக் பிரதர்” என்ற நிகழ்ச்சி தான். இந்தியாவில் முதலில் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2006ஆம் ஆண்டு அறிமுகமாகியது.

-விளம்பரம்-
biggboss

இந்த நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தான் தொகுப்பாளராக நிகழ்ச்சியை நடத்தினார். இதனால் இந்த நிகழ்ச்சி நிகழ்ச்சியை முழுவதும் பிரபலமடைந்தது. இதனை தொடர்ந்து பாலிவுட் நடிகரான சல்மான் கான் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். இதை தொடர்ந்து பிற மொழிகளிலும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி அறிமுகமானது.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி:

முதல் சீசனை தொடர்ந்து தற்போது ஆறு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஆறு சீசன்களையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சி 100 நாட்கள் நடைபெறுகிறது. பிக் பாஸ் வீட்டுக்குள் புதுப்புது வித்தியாசமான டாஸ்க்களை கொடுத்து மக்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் பட்டத்தை வெல்லும் வெற்றியாளர்களுக்கு பரிசு தொகையாக 50 லட்சமும் கொடுக்கிறார்கள்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

மேலும், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும், பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் அசிம் டைட்டில் வின்னரானார். விக்ரமன் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார். தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. மேலும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த சீசனில் கலந்து கொள்ள இருக்கும் பிரபலங்கள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

பிக் பாஸ் சீசன் 7:

அதாவது, பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலக்கப்போவது யாரு காமெடி நடிகர் சரத், பாவனா, மாகாபா, உமாரியாஸ் ஆகியோர் ஆடிஷனில் கலந்து இருப்பதாக கூறப்படுகிறது. அதில் உமாரியாஸ் கான் ஏற்கனவே விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். இவருடைய மகன் ஷாரிக் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அனைவரும் அறிந்ததே. அதே போல் பாவனா சூப்பர் சிங்கர் உட்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

ஆடிஷனில் கலந்து கொண்ட பிரபலங்கள்:

மாகாபாவும் விஜய் டிவி தொகுப்பாளர்களில் மிகப் பிரபலமான நபர். இவர்களில் யார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பார்கள் என்று தெரியவில்லை. இவர்களை அடுத்து நடிகை ரேகா நாயர் பிக் பாஸ் சீசன் 7 ஆடிசனில் கலந்து இருக்கிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் பார்த்திபனின் நடிப்பில் வெளிவந்த இரவின் நிழல் படத்தில் ரேகா நடித்திருந்தார். இன்னும் யார் யாரெல்லாம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement