நியாயமாக விளையாட சொன்ன அண்ணாச்சியிடம் எகிறிய அபிஷேக் – கழுவி ஊற்றும் பிரபல விமர்சகர்.

0
2145
prasanth
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் இரண்டு வாரத்தை நிறைவு செய்து இறுகிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பல பரிட்சயமான பல போட்டியாளர்களால் கலந்துகொண்டு இருந்தாலும் யூடுயூபில் விமர்சனங்களை பார்க்கும் நெட்டிசன்களுக்கு அபிஷேக் ராஜாவை பற்றி நிச்சயம் தெரிந்து இருக்கும். யூடுயூபில் தன்னை ஒரு அதி மேதாவி போல உணர்ந்து கொண்டு பிரபலங்களிடம் அடிக்கடி மொக்கை வாங்கி வரும் சினிமா பையன் என்று தனக்கே செல்லப் பெயர் வைத்துகொண்ட அபிஷேக்கை அறியாத வலைதள வாசிகள் இருக்க முடியாது.

அதுவும் இவர் பிரபலங்களை பேட்டி எடுக்கும் போது அவர்களிடம் இவர் கொடுக்கும் ரியாக்ஷன்களில் கண்டு கடுப்பாகத்தவர்கள் இருந்திருக்க மாட்டார்கள். அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய் ஆன்டனி பேட்டி ஒன்றில் இவர் பாடிய ‘வெயிலோடு விளையாடி’ பாடலை பலரும் வச்சி செய்தனர்.

இதையும் பாருங்க : விஜய் மக்கள் இயக்க வெற்றியால் தெம்பில் தளபதி – தந்தையுடன் சமரச மீட்டிங். என்ன பேசியுள்ளார் பாருங்க.

- Advertisement -

பொதுவாக பிக் பாஸில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு உள்ளே சென்று அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்தே ஹேட்டர்ஸ்கள் உருவாவார்கள். ஆனால், உள்ளே செல்லும் போதே ஹேட்டர்ஸ்களுடன் சென்றவர் அபிஷேக் தான். அதிலும் இவர் பிக் பாஸில் நடந்து கொள்ளும் விதத்தால் பலரும் இவரை மேலும், வெறுக்கத் துவங்கி இருக்கின்றனர்.

இன்று வெளியன் ப்ரோமோவில் கூட டாஸ்க்கில் நியாயமாக விளையாட சொன்ன அண்ணாச்சியிடம் அபிஷேக் வாக்கு வாதம் செய்தது பலரை எரிச்சல் ஊட்டியது. இப்படி ஒரு நிலையில் அபிஷேக் குறித்து பதிவிட்ட யூடுயூப் விமர்சகர் பிரசாந்த் வறுமை என்பது கேலிக்குரிய விஷயம் கிடையாது ஒருவேளை அதை வைத்து பரிதாபம் தேடிக் கொள்ள நினைத்தாலும் ஒருவரின் வறுமையை வைத்து கேலி செய்வது மிகவும் தவறான செயல் அதை இமான் அண்ணாச்சி சரியாக சுட்டிக்காட்டினார் அபிஷேக் மற்றும் வரும் இந்த விஷயத்தில் செய்தது தவறு’ என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

அதே போல இன்று வெளியான ப்ரோமோவில் இப்போ கதவ தொறந்தா கூட நான் வெளிய போய்டுவேன்னு அண்ணாச்சியிடம் சண்டையிட்டதை குறிப்பிட்டுள்ள பிரசாந்த், அப்புறம் எதுக்குடா உள்ளே போன அபிஷேக் வெண்ணெய் வாய் இருக்குன்னு எதனா பேசிட்டு என்று பதிவிட்டுள்ளார். அபிஷேக் பற்றி பிரசாந்த் இப்படி ட்வீட் போடுவது முதல் முறையல்ல. அபிஷேக் ராஜா பிக் பாஸில் கலந்துகொள்ள போகிறார் என்ற பிரசாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்து இருந்தார்.

Image

அதில், அபிஷேக் ராஜாவை நினைத்து பாவமாக இருக்கிறது அவரை தனிப்பட்ட முறையில் தெரியும் 24 மணி நேரமும் 20 கேமராவுக்கு முன்னால் அவர் கண்டிப்பாக ரசிகர்களை எரிச்சல் மட்டும் தான் அடையச் செய்வார். நான் சொல்வது தவறு என்று நிரூபித்தால் மகிழ்ச்சிதான் என்று பதிவிட்டிருந்தார். ஆனால், அந்த பதிவை ட்விட்டரில் இருந்து நீக்கினார் பிரசாந்த். இருப்பினும் அந்த பதிவின் ஸ்க்ரீன் ஷாட் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நேரடியாகவே அபிஷேக்கை தொடர்ந்து ட்வீட் செய்து வருகிறார் பிரசாந்த்.

Advertisement