பிரதீப்ப நான் அப்படி தாக்கியதுக்கு இதா காரணம் – டிவியில் காட்டப்படாத விஷயத்தை சொன்ன விஜய் வர்மா.

0
385
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் பிரதீப் இடம் நடந்து கொண்டது குறித்து விஜய் வர்மா அளித்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தற்போது நான்காவது வாரத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார். முதல் வாரமே நிகழ்ச்சி விறுவிறுப்பாகவும் கலவரமாகவும் சென்றிருந்தது. முதல் வாரம் எவிக்சன் நடக்காது என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேறி இருந்தார். பின் பவா, தன்னால் இனி நிகழ்ச்சியில் விளையாட முடியாது என்று தாமாகவே வெளியேறிவிட்டார். இதனை அடுத்து இரண்டாவது வாரம் நடந்த எவிக்ஷனில் மாயா அல்லது பூர்ணிமா ஆகிய இருவரில் யாராவது வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7:

ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக விஜய் வர்மா வெளியேற்றப்பட்டு இருந்தார். விஜய் வர்மாவின் வெளியேற்றம் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதற்கு முக்கிய காரணம், விஜய் வர்மா பிக் பாஸில் ஒரு கண்டன்ட் கொடுக்கும் போட்டியாளராகவே இருந்தார். அதோடு ஏற்கனவே எச்சரிக்கை கொடுக்கப்பட்ட நிலையில் அவர் டாஸ்கின் போது நடந்துகொண்ட விதம் அவருக்கு பிரச்சனையை ஏற்படுத்தியது. அதிலும் ஆக்ஸிஜன் சிலிண்டர் டாஸ்க்கில் விஜய் வர்மா செய்தது அதிக சர்ச்சையை கிளப்பி இருந்தது.

அப்போது விஜய் வர்மா காலை பிரதீப் இறுகிப்பிடித்துக் கொண்டிருந்ததால் வெளியே வர முடியாமல் விஜய் வர்மா தவித்து இருந்தார். ஒரு கட்டத்தில் பிரதீப்பை அப்படியே தரையில் தூக்கி அடித்தார் விஜய் வர்மா.
இதனால் பிரதீப் சுருண்டு விழுந்தார். இதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி பலருமே கண்டனம் தெரிவித்திருந்தார்கள். அதற்கு பிறகு தான் விஜய் வர்மா எலிமினேட் செய்யப்பட்டிருந்தார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் வெளியே வந்த பிறகு பேட்டியில் விஜய் வர்மா, என்னுடைய முழு நோக்கம் அந்த ஆக்சிஜன் சிலிண்டர் எடுக்க வேண்டும் என்பதுதான். அதை தவிர மற்றவர்களை நான் தடுக்க நினைக்கவே இல்லை. அதை பற்றி நாங்கள் பேசக்கூடாது. என்னுடைய கழுத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. நிகழ்ச்சி தொடங்கும் ஒரு நாள் முன்புதான் அறுவை சிகிச்சை செய்து கொண்டு சென்றேன். அது அவருக்கு நல்லாவே தெரியும்.

எனக்கு ஐஸ் கூட அவர் எடுத்துக் கொண்டு வந்து தந்திருந்தார். எல்லாம் தெரிந்தும் அவரே அதை பண்ணியது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்கு பிறகு அவரிடம் மன்னிப்பு கூட கேட்டேன். அவரும் சமாதானம் ஆகிவிட்டார். அவர் பண்ணும் போது ஒரு ஐந்து நொடி என்னால் மூச்சு விட முடியாமல் போனது. வேணும் என்றே நான் அது அதை செய்யவில்லை என்று கூறியிருந்தார்.’பி[

Advertisement