பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கிய நாள் முதலே பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னால் போட்டியாளர்களை பல்வேறு சேனல்களும் பேட்டி எடுத்து வருகின்றனர். அந்த வகையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான பாலாஜி பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்து பேசியுள்ளார்.
அப்போது வனிதா குறித்து கேட்ட போது, பிக் பாஸ் வீட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய அவமானம் வனிதா தான் என்று கூறியுள்ளார். வனிதா குறித்து மேலும் பேசியுள்ள பாலாஜி, அந்த வீட்டில் உனக்குள்ள மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும்.
இதையும் பாருங்க : நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மிதந்த பிரியங்கா சோப்ராவின் புகைப்படங்கள்.!
அதை விட்டு தாட் பூட்னு கத்துகிறார். வீட்டிலேயே அடங்காமல் அப்பா அம்மாவை எதிர்த்து பேசிய இவரா இந்த வீட்டில் அடங்க போகிறார். விஜயகுமார் எவ்வளவு பெரிய ஆளு அவரையே அந்த அம்மா அப்படி பேசினார். அவங்க ஒழுங்கா இருந்தால் வீட்டில் நிலைப்பார்கள் இல்லையென்றால் அவர் வெளியே வருவது உறுதி தான். அவர் வெளியேறிவிட்டால் அந்த வீடு உறுப்பிட்டுவிடும் என்று கூறியுள்ளார்.
அதே போல ஷெரின் குறித்து பேசுகையில், ஷெரின் ஒரு ஹீரோயின், அதனால் அவர் அங்கும் ஹீரோயின் போல இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதிலும் அவர் போடும் ஆடைகள் மிகவும் கேவலமாக இருக்கிறது. மும்தாஜ் கூட ஹீரோயின் தான் ஆனால், பிக் பாஸ் வீட்டில் அவர் அவ்வளவு நாகரீகமாக உடை அணிந்தார் என்று கூறியுள்ளார் பாலாஜி.