கமல் பத்தி பேசாதீங்க, அவர பத்தி நான் அதையெல்லாம் வெளியிடுவேன்’ புதிய சர்ச்சையை கிளப்பிய நித்யா. வைரலாகும் ஆடியோ இதோ.

0
953
Nithya
- Advertisement -

கடந்த சில வருடமாகவே சோசியல் மீடியாவில் தாடி பாலாஜியின் குடும்ப பிரச்சனை தலை விரித்து ஆடி கொண்டு இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் தாடி பாலாஜி. இவரின் குடும்ப பிரச்சனை ஊருக்கே தெரிந்தது. நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா. இவர்களுக்கு போஷிகா என்ற மகள் உள்ளார். தாடி பாலாஜியும், நித்யாவும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இணைந்து நடனம் ஆடிய போது தான் இவர்களுக்கு இடையே இருந்த குடும்ப பிரச்சினை வெளிவந்தது.

-விளம்பரம்-

பிறகு இவர்கள் இருவரும் தொடர்ந்து போலீஸ், கோர்ட்டு என இவர்களுடைய குடும்ப பிரச்சனை வெளியுலகத்தில் வந்துகொண்டிருந்தது.அதோடு சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. பிறகு கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் தான் தமிழில் நடைபெற்ற பிக் பாஸ் இரண்டாவது சீசனில் இவர்கள் இருவரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டார்கள்.

- Advertisement -

மகளை வைத்து வெளியிட்ட வீடியோ :

பிக் பாஸ் சீசன் இறுதியில் இவர்கள் இருவரும் சேர்ந்து விட்டதாக காட்டப்பட்டது. ஆனால், இன்று வரை தாடி பாலாஜி தனியாகவும், நித்யா தன் மகள் போஷிகா உடன் தனியாக தான் வாழ்ந்து வருகிறார்.தாடி பாலாஜி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்த போது தனது மகள் குறித்து கண் கலங்கி பேசி இருந்தார். அப்போது தன் மகளிடம் சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் நித்யா.

This image has an empty alt attribute; its file name is image-158.png

எச்சரித்த நித்யா :

அதில் பாலாஜி என்னுடைய கேரக்டரை ரொம்ப அசிங்க படுத்தி கொண்டிருக்கிறார்.என்னை பற்றி ரொம்ப ரொம்ப தப்பா பேசினால் நான் கண்டிப்பாக அவர் என்னை அசிங்க அசிங்கமாக திட்டிய வாய்ஸ் மெசேஜை வெளியிடுவேன் என்றும் கூறி இருந்தார். இந்த நிலையில் தனது மகளை, மனைவி பிடியிலிருந்து மீட்டுத் தரும்படியும் மனைவி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நடிகர் தாடி பாலாஜி தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் புகார் :

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நானும் என் மனைவியும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்ததாகவும், மகள் போஷிகா மனைவி பராமரிப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும், இவர் எப்படி வேண்டுமானலும் அவர் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளட்டும். ஆனால், மகள் வாழ்கை பாழாகிறது. அவள் நல்ல மார்க் வாங்குற பொண்ணு . சமீபகாலமாக மகளை பள்ளிக்கு சரியாக போக விடாமலும் தவறான வழிகாட்டுதலால் தன் மகளை மிரட்டி தன்னிடம் பணம் பறிக்கும் முயற்சியில் மனைவி நித்யா ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

கமல் குறித்து நித்யா :

இப்படி ஒரு நிலையில் பாலாஜியின் இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கமளித்துள்ள நித்யா, என் தரப்பு நியாயம் என்ன என்பதை கோர்ட் ஆர்த்துக்கொள்ளட்டும், மீடியா முன் பேசினால் எனக்கு நியாயம் கிடைக்குமா என்ன ? என்று கூறியுள்ளார். மேலும், பிக் பாஸில் கமல் செய்த அட்வைஸ் குறித்து கேட்ட போது ‘அவர பத்தி பேசுனா, அவர பத்தி நிறய வெளியிட்டுவிடுவேன். அவர மாதிரி மோசமான கேரக்டரை நான் என் லைப்ல பாத்தது இல்ல, வேண்டாம் என்ன பேச வச்சிராதீங்க’ என்று பேசி இருக்கிறார் நித்யா.

Advertisement