இந்த புகழ் நிரந்தரமில்லன்னு புரிஞ்சிகிட்டு அவ வாழ்க்கை நல்லா இருக்கும் – தாமரை குறித்து அவரின் நாடக நண்பர்கள் பேட்டி.

0
309
thamarai
- Advertisement -

அனைவரும் எதிர்பார்த்திருக்கும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. சிபிக்கு இந்த வருடம் பிக் பாஸ் டைட்டில் வின்னர் அடிப்பதற்கான வாய்ப்பு இருந்தது என்று சோசியல் மீடியாவில் கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர் பணத்தை பெற்று தானாகவே வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது. தற்போது தாமரை, பாவனி, பிரியங்கா, அமீர், ராஜ், நிரூப் ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் யார் டைட்டில் வின்னர் ஆகப் போகிறார்கள் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

-விளம்பரம்-

இது ஒரு பக்கமிருக்க, பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் முகம் தெரியாத நபர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் தாமரை. ஒரு வாரம் தாக்கு பிடிப்பாரா என்று எதிர்பார்க்கப்பட்ட இவர் கடைசி எலிமினேஷன் வரை தாக்கு பிடித்த பின்னரே வெளியேறினார். இவர் நாடக நடிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ராஜகுரு அம்சபிரியா நாடக குழுவில் தாமரைச்செல்வி நடித்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் பிக் பாஸ் வீட்டில் திறமையாக விளையாடி வருகிறார். இந்த வாரம் யார் எலிமினேட் ஆகப்போகிறார் என்ற குழப்பத்தில் மக்கள் உள்ளார்கள்.

- Advertisement -

நாடக குழுவினர் அளித்த பேட்டி:

இந்நிலையில் தாமரை நடிக்கும் நாடக குழுவைச் சேர்ந்தவர்களிடம் சமீபத்தில் பேட்டி எடுக்கப்பட்டது.
அதில் அவர்கள் கூறியிருப்பது, 35 வருடமாக இந்த தொழிலில் இருக்கிறோம். இந்த தொழிலுக்கு வந்த பிறகு பொழப்புக்கு பெரிய கஷ்டம் எல்லாம் வந்தது கிடையாது. மக்களுடைய ஆசிர்வாதம் தான் எங்களுடைய வளர்ச்சிக்கு காரணம். இந்த 2 வருட கொரானாவில் தான் நாங்கள் கஷ்டப்பட்டோம். எங்களுடைய கலைக்குழுவில் தாமரைச்செல்வி இருக்கிறார்.

தாமரை தான் ஜெயிக்கணும்:

அவர்கள் நல்ல நடிகை, சிரிப்பழகி. எங்களுடைய கலைக்குழுவில் எல்லோருக்கும் அவர்களை ரொம்ப பிடிக்கும். அவர் ஒரு நல்ல டான்ஸர். பாசத்திலும், குணத்திலும் அருமையான பெண். அவர்கள் பிக் பாஸ் வீட்டில் ஜெயிக்கனும் என்பது தான் எங்களுடைய ஆசை. தாமரை பிக் பாஸ் வீட்டில் இருப்பது நாட்டுப்புறக் கலைஞர்கள் எல்லோருக்கும் முதல் வெற்றியை வாங்கி கொடுத்ததற்கு சமமாக இருக்கிறது.

-விளம்பரம்-

பிக் பாஸ்ஸுக்கு பிறகு தாமரை நாடகத்திற்கு வருவாரா:

நாடகக் கலையில் இருந்து பிக்பாஸ் வீட்டிற்கு ஒருத்தர் போய் இருப்பது எங்களுக்கு ரொம்ப பெருமையாக இருக்கு. தாமரைக்கு ஊரில் ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். சில ஊர்களில் தாமரைச்செல்வியை கூட்டிட்டு வாங்க என்று சொல்லுவார்கள். இப்ப பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது கூட பல பேரு அந்தப் பெண் வந்ததும் கூட்டிட்டு வாங்க என்று சொல்கிறார்கள். ஆனால், அந்த புகழை அனுபவித்து வந்த பிறகு தாமரை மறுபடி நாடகத்துக்கு வருவார்களா? என்று எங்களுக்கு தெரியவில்லை.

தாமரை வாங்கிய சம்பளம்:

அப்படி அவர்கள் வந்தாலும் முன்னாடி கொடுத்த காசு தான் கொடுப்பார்கள். அதிகமாக கேட்டால் யாரும் ஒத்து கொள்ள மாட்டார்கள். ஏன்னா, தாமரைக்கு ஒரு நாள் நைட்டு மேடையில் பாட்டு பாடி ஆடுறதுக்கு 5000 ரூபாய் தான் கொடுப்பார்கள். அதனால் இந்த புகழ் நிரந்தரமில்லை என்பதை அவர் புரிந்துக்கொண்டால் தான் அவருடைய வாழ்க்கை நல்லா இருக்கும். எங்கள் கலைக் குழுவில் இருந்து ஒரு பெண் இன்னைக்கு நாடே பார்க்கிற நிலைமைக்கு வந்து இருப்பதை நினைத்தால் எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள்.

Advertisement