பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தமிழில் விரைவில் துவங்க இருக்கிறது. பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்கள் இருந்து வருவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா தத்தாவிற்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் மிகவும் வெறுக்கப்பட்டார் வைஷ்ணவி தான். பிக் பாஸ் வைஷ்ணவி, வெளியே வந்த பின்னரும் இவர் சர்ச்சையான பல விடயங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.
பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாக ஆர் ஜேவாக இருந்து வந்தார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது. வைஷ்ணவி, அஞ்சான் ரவி என்பவரை நீண்ட நாட்களாக காதலித்துவந்தார் . அஞ்சான், விமான ஓட்டுநர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர்கள் இருவரும் 3 வருடங்களாக காதலித்து வந்தனர்.
இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக லிவிங் டுகேதார் முறையில் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் வைஷ்ணவி தனது நீண்ட வருட காதலரான அஞ்சானை திடீரென்று திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், இவர்களது திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. தனது திருமணம் குறித்து பேசிய வைஷ்ணவி நாங்கள் மங்களம் முழுங்க தாலி கட்டிக் கொள்ளவில்லை, மோதிரங்களை பரிமாறிக் கொள்ளவில்லை. நாங்கள் தங்கமோ, வைரமோ வேறு எந்த நகைகளையோ வாங்கவில்லை.
நான் கவரிங் நகைகளை தான் அணிந்திருந்தேன் என்று கூறியிருந்தார். சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் வைஷ்ணவி அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் இவர், தனது கணவருடன் பேலி நாட்டிற்கு சென்ற போது தண்ணிரில் நீச்சல் உடையில் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.