எதுக்கு உங்க மகளை பிக் பாஸிற்கு அனுப்புனீங்க – பத்திரிக்கையாளர் கேள்விக்கு வனிதா அளித்த பதில்.

0
841
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன் மகளை அனுப்பி வைத்ததற்கான காரணம் குறித்து வனிதா அளித்து இருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக ஞாயிற்று கிழமை தொடங்கி மூன்று நாட்கள் கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அனன்யா ராவ், ஐஷு, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

-விளம்பரம்-

மேலும், இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் பரீட்சயமான நபர்களில் வனிதாவின் மகள் ஜோவிகாவும் ஒருவர். பிக் பாஸ் வீட்டில் முதல் நாளே ஜோவிகா, தனக்கு படிப்பு வராது என்று சொன்னவுடன் சீனியஸ் நடிகர்கள் எல்லோரும் படிப்பு குறித்து அறிவுரை எல்லாம் சொல்லி இருந்தார்கள்.

- Advertisement -

நிகழ்ச்சியில் ஜோவிகா:

அது மட்டும் இல்லாமல் தொடர்ந்து விசித்திரா, யுகேந்திரன் இருவரும் படிப்பை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது ஜோவிகா யாருடைய மனமும் புண்படாத வகையில் வேறு ஏதாவது பேசலாம் என்று டாபிக்கை டைவர்ட் செய்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருந்தது. இது தொடர்பாக வனிதாவும் ஜோவிகாவை பாராட்டி பதிவு போட்டிருந்தார். மேலும், ஜோவிகா நேர்மையாகவும் புத்திசாலித்தனமாகவும் விளையாடி கொண்டு வருகிறார்.

டிபேட் டாஸ்க்:

பின் நேற்றைய டிபேட் டாஸ்க்கில் கூட ஜோவிகா கண்கலங்கி எமோசனலாக பேசி இருந்தார். இவர் பேசியதை கேட்டு அங்கு இருந்த பிற போட்டியாளர்கள் அவரை கைதட்டி உற்சாகப்படுத்தி பேசியிருக்கிறார்கள். இப்படி நிகழ்ச்சி தொடங்கி சில நாட்களிலேயே ஜோவிகா நல்ல திறமையாக விளையாடி வருகிறார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன் மகளை அனுப்பியதற்கான காரணம் குறித்து வனிதா கூறியது, நான் எந்த அறிவுரை சொல்லியும் என் மகளை நிகழ்ச்சிக்கு அனுப்பி வைக்கவில்லை.

-விளம்பரம்-

வனிதா அளித்த பேட்டி:

நான் வெற்றி பெற்று வந்திருந்தால் அவளுக்கு அறிவுரை சொல்லி இருக்கலாம். ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கிறது. அதை யாராலும் மாற்ற முடியாது. சினிமாவில் வேண்டும் என்றால் நடிப்புக்காக மாற்றத்தான் வேண்டும். அவள் ஒரு படம் பண்ணும் போது கண்டிப்பாக நான் அறிவுரை சொல்லுவேன். ஏனென்றால், நானும் அந்த துறையில் பயணித்து இருக்கிறேன். ஆனால், பிக் பாஸ் என்பது ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி. அங்கு அவளாகத்தான் இருக்க முடியும். இதற்காக எந்த ஒரு பயிற்சி, கோர்ஸ் முடித்துவிட்டு வந்து இருக்க முடியாது.

ஜோவிகா குறித்து சொன்னது:

இப்படி நடந்து கொள் என்று சொல்லியும் தர முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. அது என் மகளிடம் நிறையவே இருக்கிறது. என் மகள் மேல் எனக்கு சந்தேகம் இருந்திருந்தால் அவளுடைய கேரியர் தொடங்கும் முன்பே இவ்வளவு பெரிய ரிஸ்க், இவ்வளவு பெரிய மேடையில் நான் அனுப்பி இருக்க மாட்டேன். ஆனால், அவள் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையினால் தான் நான் அனுப்பி வைத்தேன். அவளைப் பற்றி நான் இங்கு சொல்ல விரும்பவில்லை. உங்களுக்கே புரியும். உங்களுக்கு அவளை பிடிக்கும். 100 நாட்களில் அவள் யார்? என்பது தெரிந்து விடும். அதற்காகத்தான் நான் அனுப்பி வைத்தேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement