ஜோவிகாவோட அப்பா இவர் தான், ஆனால், அவர் பேருக்கு பதில் விஜயகுமார் பேர வச்சதுக்கு இதான் காரணம் – வனிதா

0
2971
- Advertisement -

ஜோவிகாவின் உண்மையான தந்தை இவர்தான் என்று வனிதா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்து தான். அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக கடந்த ஞாயிற்று கிழமை தொடங்கி ஒரு வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

-விளம்பரம்-
Vanitha

.இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான மற்றும் பரிட்சயம் இல்லாத பலர் கலந்துகொண்டு உள்ளனர்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜோவிகா:

அந்த வகையில் வனிதா மகள் ஜோவிகாவும் ஒருவர். போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த முதல் நாள் அன்றே இந்த நிகழ்ச்சிக்கு வந்தது குறித்தும் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை குறித்தும் பேசிக் கொண்டிருந்தார்கள். அதில் ஜோவிகா, எனக்கு படிப்பு வராது. படிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லை என்று சொல்லி இருந்தார். உடனே பலருமே ஜோவிகாவிற்கு அறிவுரை கூற ஆரம்பித்து விட்டார்கள். குறிப்பாக யுகேந்திரன், விசித்திரா படிப்பு குறித்து அறிவுரை வழங்கி இருந்தார்கள்.

ஜோவிகா – விசித்திரா சண்டை:

ஆனால், இதையெல்லாம் ஜோவிகா கண்டுகொள்ளாதது போல் தான் இருந்தார். பின் படிப்பு குறித்து விசித்ரா-ஜோவிகா இடையே பெரிய கலவரம் நடந்தது. சொல்லப்போனால், கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் ஜோவிகா- விசித்ரா இடையே நடந்த சண்டைதான் ஹாட் டாபிக்காக சென்று கொண்டிருந்தது. இதற்கு சிலர் ஜோவிகாவிற்கு ஆதரவாகவும் சிலர் விசித்ராவுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

ஜோவிகா தந்தை குறித்த சர்ச்சை:

மேலும், ஜோவிகா பேசியிருந்தது சரிதான் என்று வனிதா ஆதங்கமாக பேசினார். இதை அடுத்து வனிதாவிடமும் பலரும் ஜோவிகா பேசியது குறித்து பேட்டி எடுத்திருந்தார்கள். இந்த நிலையில் வனிதாவின் முன்னாள் கணவரான ராஜன் என்பவர் வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அளித்த பேட்டி வீடியோ வைரலாகி இருந்தது. அதில் அவர், வனிதாவின் ஒட்டுமொத்த குடும்பமே படிப்பறிவு இல்லாதவர் தான். ஜோவிகா ஆகாஷ் மகளும் இல்ல, என் மகளும் இல்ல. அவர் ஆகாஷுடன் விவாகரத்து ஆன பின்னர் ஐடி வேலை செய்த அருன் என்பவருக்கு பிறந்தவர் தான் ஜோவிகா.

வனிதா கொடுத்த விளக்கம்:

ஆகாஷிற்கு பிறந்தது ஒரே மகன் தான் என்று கூறிஇருந்தார். இந்த பேட்டி வீடியோ வைரலானதை தொடர்ந்து பலருமே வனிதாவிடம் ஜோவிகாவின் தந்தை யார்? என்று கேட்டுக் கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஜோதிகாவின் தந்தை குறித்து வனிதா, ஜோவிகாவின் தந்தை ஆகாஷ் தான். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆகாஷ் பெயரைதான் ஜோவிகா இனிஷியலாக போடுகிறார் என்று கூறி இருக்கிறார்.

Advertisement