ரைட்டு, இதான் மேட்டரு – வனிதாவ ஹீரோயினா போட்டு படத்தையும் தயாரிக்கும் ஹரி நாடார். ரெண்டு பேருக்கும் இதான் உறவாம்.

0
2459
vanitha

ஹரிநாடர் மற்றும் வனிதா நடிக்கும் புதிய படத்தின் பூஜை நேற்று நடைபெற்றுள்ளது. பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமானார்.வனிதாவிற்கு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி பின்னர் அந்த இரண்டு திருமணம் விவாகரத்தில் முடிந்தது அனைவரும் அறிந்த விஷயம் தான். அதன் பின்னர் இவர் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் உடன் காதலில் இருந்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் பிரிந்துவிட்டார்கள்.

Vanitha vijayakumar new movie 2k azhaganathu kaadhal hari nadar

நடிகை வனிதா சந்திரலேகா படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் ஒரு சில தமிழ் படங்களில் நடித்த வனிதா, திருமணத்திற்கு பின் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சினிமாவில் இருந்து விலகினார். பின்னர் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு ரீ-என்ட்ரியை கொடுத்தது. அதன் பின்னர் நடிகை வனிதா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வந்தார்.

- Advertisement -

சமீபத்தில் தான் அந்த நிகழ்ச்சி நிறைவடைந்தது. அதே போல யூடூயூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.இப்படி ஒரு நிலையில் வனிதா மீண்டும் கதாநாயகியாக நடிக்க இருக்கிறாராம். ஏற்கனவே அனல் காற்று என்ற படத்தில் கதாநாயகியாக கமிட் ஆன வனிதா, தற்போது 2k என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்றுள்ளது. இந்த படத்தின் நாயகன் வேறு யாரும் இல்லை நடமாடும் நகைக்கடையாக வளம் வந்து கொண்டிருக்கும் ஹரி நாடார் தான்.

கழுத்திலும் கைகளிலும் கிலோ கணக்கில் தங்க நகைகளுடன் வலம் வருபவர் ஹரி நாடார். அவரது ஆபரண அணிகலன்களாலேயே மிகவும் பிரபலமானவர். இவர் ‘பனங்காட்டுப் படை’ எனும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட்டு மூன்றாம் இடம் பிடித்தவர். சமீபத்தில் கூட இவர் விமான நிலையம் சென்ற போது வருமான வரித்துறையினர் வளைத்து பிடித்து நகைகள் குறித்து விசாரித்த போது 1 கோடியே 52 லட்ச ரூபாய்யை முன்கூட்டியே கட்டி மிரளவைத்தார் ஹரி நாடார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-225-1024x622.jpg

இப்படி அரசியலில் கலக்கி வரும் ஹரி நாடாருக்கு சினிமாவிலும் நடிக்க ஆசை வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் அந்த படத்தை இவரே தாயரிக்க இருக்கிறார். இவரின் தயாரிப்பு நிறுவனமான ‘அண்ணாச்சி சினி மார்க்’ தயாரிப்பில், ஹரி நாடார் நடிக்கும் அந்தப் படத்தின் பூஜை நேற்று (பிப்ரவரி 27) வடபழனியில் இருக்கும் ஏ.வி.எம். ஸ்டுடியோவில் நடைபெற்றது. இப்படத்தை முத்தமிழ் வர்மா என்பவர் எழுதி இயக்குகிறார். இந்த விழாவில் பேசிய ஹரி நாடார், வனிதா தனக்கு தூரத்து சொந்தம் என்றும் தனக்கு அவர் அண்ணி முறை என்றும் கூறியுள்ளார்.

Advertisement