பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமானார்.வனிதாவிற்கு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி பின்னர் அந்த இரண்டு திருமணம் விவாகரத்தில் முடிந்தது அனைவரும் அறிந்த விஷயம் தான். அதன் பின்னர் இவர் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் உடன் காதலில் இருந்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் பிரிந்துவிட்டார்கள். திருமணத்திற்கு பின் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சினிமாவில் இருந்து விலகினார். இவருக்கு ரீ- என்ட்ரி கொடுத்தது விஜய் டிவி தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் பிரபலமடைந்த வனிதா பின்னர் விஜய் டிவியின் பல நிகழ்சகளில் பங்கேற்றார். அந்த வகையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்.இதில் இவருக்கு ஜோடியாக சுரேஷ் சக்ரவர்த்தி பங்கேற்று இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து விள்குவதாக அறிவித்து இருந்தார்.
இதையும் பாருங்க : சிவகார்த்திகேயனே என்கிட்ட இதான் சொன்னாரு - பிறந்தநாளில் திட்டியவர்களுக்கு அர்ச்சனா பதிலடி.
அதில், ஒருவர் கேலி செய்யப்படுவதையும் துன்புறுத்தப் படுவதை என்னால் ஏற்றுக்கொள்ள மாட்டேன் அது என் குடும்பத்தினரும் இருந்தாலும் சரி என்பதை இந்த உலகுக்கே தெரியும் விஜய் டிவி தான் எனக்கு பல வாய்ப்புகளை கொடுத்தது இருவரும் பரஸ்பர மரியாதை உண்டு. அது எப்போதும் நீடிக்கும்.ஆனால், வேலை செய்யும் இடத்தில் தொழில் முறையில்லாத நெறி முறையற்ற நடத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆணவத்தால் என் வளர்ச்சியை தாங்க முடியாத ஒருவர் எனக்கு தொல்லை கொடுத்து, அவமானப்படுத்தி மோசமாக நடத்தினார்.

கடுமையாக உழைத்து முன்னேறிய ஒரு மூத்தவர் முன்னேறத் துடிக்கும் இளைஞர்களை தரம் தாழ்த்தி பார்ப்பது அவர்களை அவமானப் படுத்துவதை வேதனையாக உள்ளது குடும்பம் கணவர் பெற்றோர்கள் ஆதரவு இல்லாமல் ஒரு தனி பெண்ணாக மூன்று குழந்தைகளுக்கு தாயாக சாதித்துவரும் ஒரு பெண்ணை இப்படி நடத்துகிறார். ஒரு பெண் தான் இன்னோரு பெண்ணுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
பல ஆண்டுகள் அனுபவம்மிக்க சீனியர் ஒருவர் தன்னைவிட வயது குறைந்தவர்களிடம் இப்படி நேர்மையின்றி நடந்துகொள்வது எனக்கு வருத்தம் அளிக்கிறது. பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மற்ற போட்டியாளர்களுக்கு எனது வாழ்த்துகள். என்னால் இந்தப் போட்டியில் இருந்து விலகிய சுரேஷ் சக்ரவர்த்தியிடம் மன்னிப்பு கோருகிறேன்' என்றார் என்று கூறியிருந்தார்.

வனிதா கூறிய அந்த அனுபவம் வாய்ந்த பெண் ரம்யா கிருஷ்ணன் தான் என்று பலரும் கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் என்ன நடந்தது என்று நிகழ்ச்சியில் உள்ளவர்களிடம் விசாரிக்கபட்டுள்ள போது, கடந்த ஷூட்டிங்கின்போது அவங்களுடைய பர்ஃபார்மன்ஸூக்கு ரம்யா கிருஷ்ணன் தந்த கமென்ட்ஸ்தான் வனிதாவைக் காயப்படுத்திட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து ரம்யா கிருஷ்ணன் கூறியுள்ளது. அவங்கதான் ஏதேதோ சொல்லியிருக்காங்களே... மேற்கொண்டு பிக்பாஸ் ஜோடிகள் ஷூட்டிங்ல என்ன நடந்ததுன்னு நீங்க வனிதாவையே கேளுங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. மீறி இந்த விஷயம் தொடர்பா என்னுடைய கருத்து வேணும்னா, அதுக்கு நோ கமென்ட்ஸ்தான் என்று சிம்பிளாக ஒரே வார்த்தையில் கூறியுள்ளார்.





