அன்றே கணித்த சூர்யா – சிங்கம் 2 படத்தில் வந்தது போல தூத்துக்குடியில் நடைபெற்றுள்ள சம்பவம்.

0
979
singam

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் சூர்யா. சமீபத்தில் நடைபெற்று வரும் இயற்கை அழிவுகள் அனைத்தும் சூர்யாவின் படங்களில் வரும் காட்சிகள் போலவே இருக்கிறது என்று மீம் கிரியேட்டரகள் கிளப்பி விட பின்னர் சூர்யா படங்களில் வரும் காட்சிகளை தற்போது நாட்டில் நடக்கும் பிரச்சனைகளோடு ஒப்பிட்டு பல்வேறு மீம்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. சூர்யா நடித்த ஏழாம் அறிவு திரைப்படத்தில் சீனாவில் இருந்து வரும் ஒரு நபர் கெட்ட வைரஸை பரப்புவது போன்ற காட்சி காண்பிக்கப்படும்.

தற்போது உலகம் முழுவதும் சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவி உள்ளது. அதே போல சமீபத்தில் சூர்யா நடித்த காப்பான் படத்தில் வெட்டுக்கிளிகளை பற்றிய காட்சிகள் இடம் பெற்று இருக்கும். அதே போல் வடநாட்டில் விளைநிலங்களில் வெட்டுக்கிளிகள் புகுந்து அட்டகாசம் செய்துவந்தன. இதனால் நெட்டிசன்கள் சூர்யாவை ட்ரோல் செய்யும் மீம்ஸ்களை வெளியிட்டு வந்தனர்.

இதையும் பாருங்க : 55 வயது நடிகரை திருமணம் செய்து கொண்டது ஏன் – பையா பட வில்லனின் 29 வயது இரண்டாம் மனைவி விளக்கம்.

- Advertisement -

சூர்யா நடித்த படங்களில் நடக்கும் சம்பவங்கள் எல்லாம் நிஜத்திலேயே நடக்கிறது என்று அடிக்கடி மீம்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இப்படி ஒரு நிலையில் சிங்கம் 2 படத்தில் வருவது போன்றே தூத்துக்குடியில் நடைபெற்ற சம்பவத்தால் மீண்டும் அன்றே கணித்த சூர்யா என்ற மீம்கள் வைரலாகி வருகிறது. சிங்கம் 2 படத்தில் சர்வதேச போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவன் டேனி எதேர்ச்சையாக தூத்துக்குடி சிட்டிக்குள் வர, அப்போதுஅவரை கைது செய்வார் சிங்கம்.

தற்போது அதே போல சம்பவம் தூத்துக்குடியில் உண்மையாக நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி வெள்ளப்பட்டி கடற்கரை பகுதியில் சந்தேகப்படும்படியாக வெள்ளைக்காரர் ஒருவர் சுற்றி திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து இந்த ஆபரேஷன் மேற்கொள்ளப்பட்டது.போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில், இங்கிலாந்து நாட்டு போதை மருந்து ஆசாமி சிக்கியுள்ளார்.போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில், இங்கிலாந்து நாட்டு போதை மருந்து ஆசாமி சிக்கியுள்ளார். இவர் மீது பல கடத்தல் வழக்குகள் பதிவாகி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

-விளம்பரம்-

Advertisement