கல்வியின் முக்கியத்துவம் குறித்து வைரலான கோபிநாத்தின் வீடியோ – பந்தாவாக கமண்ட் செய்துவிட்டு பின்னர் நீக்கிய வனிதா.

0
795
- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிக் பாஸ் வீட்டில் படிப்பு குறித்துஜோதிகாவிற்கும் – விசித்ராவிற்கும் நடந்த வாக்குவாதம் தான் சமூக வலைதளத்தில் பேசுபொருளானது. இந்த விவகாரம் குறித்து பேசிய வனிதா ‘எந்த நிலையிலும் பொய் சொல்ல வேண்டாம் என்று கூறுகின்றேன் இது படித்திருக்கிறேன் தற்பொழுது கொண்டிருக்கின்றேன் என்று எதுவும் பொய் சொல்ல வேண்டாம் என்று கூறியிருந்தேன். நான் ஜோவிகாவிடம் கூறியதும் இதுதான் நீ படிப்பு வரவில்லை என்று வீட்டில் அமர்ந்து கொண்டு AC போட்டுக் கொண்டு சும்மா இருக்கவில்லை நீ உனக்கு பிடித்தது செய்து கொண்டு இருக்கிராய்.

-விளம்பரம்-

இந்த குழந்தைக்கு படிப்பு வரவில்லை அதற்கு பிடிக்கவில்லை. அந்த சத்தம் பிடிக்கவில்லை. அதற்கு மண்டையில் ஏறவில்லை நானும் அன்பால் புரிந்து கொள்ள வைப்பதற்கு முயற்சி செய்தேன் ஆனால் என்னால் முடியவில்லைஎன்னுடைய பிசினஸ் அவருக்கு முக்கியமில்ல அவருடைய கேரியர் தான் எனக்கு முக்கியம். அதனாலதான் நான் அவளை நான் இயக்குனர் பார்த்திபனிடம் சேர்த்துவிட்டேன்.

- Advertisement -

நான் என் மகளை இரவு 10:00 மணி ஆனாலும் ஆட்டோவில் தான் பயணம் செய்ய சொல்லுவேன். எங்களிடமிருந்து 2 கார்கள் உள்ளது ஆனால் ஒரு அசிஸ்டெண்ட் என்பவர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு செல்லும் போது காரில் இறங்க கூடாது. பஸ் ஏரியோ அல்லது மெட்ரோவில் சென்றால் தான் அசிஸ்டன்ட் டைரக்டருக்கு வலி அவளுக்கு புரியும். அவள் அங்கு சிறப்பாக செயல்பட்டதால் பார்த்திபன் அவரை பிக் பாஸ் முடித்துவிட்டு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று கூறி இருந்தார்.

அதே போல ஜோவிகா சிறு வயதில் தமிழில் பாடம் கற்கும் வீடியோ ஒன்றை அவரது தந்தை அனுப்பியதாக வீடியோ ஒன்றையம் பதிவிட்டு இருந்தார் வனிதா.இதனிடையே இந்த விவகாரம் தான் கடந்த இரண்டு தினங்களாக சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டிருக்கின்றது. இதற்கு சிலர் ஜோவிகாவிற்கு ஆதரவாகவும் சிலர் விசித்ராவுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அந்த வகையில் படிப்பு முக்கியம் என்பது குறித்து நீயா நானா கோபிநாத் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. படிக்காதவன் தான் சாதிக்கிறான் என்று சச்சின், பில்கேட்ஸ், காமராஜர் என ஒரு 10 பேரை சொல்வார்கள். படிக்காமல் வெற்றி பெற்றவர்கள் 10 பேரை நீங்கள் சொன்னால் படித்து வெற்றி பெற்றவர்கள் 10 லட்சம் பேரை நான் சொல்லுவேன். படிப்பு ரொம்ப முக்கியம்.

உங்களை திசை திருப்புகிறார்கள். கல்வி தான் முக்கியமானது.உங்களை திசை திருப்புகிறார்கள். கல்வி தான் முக்கியமானது’ என்று அதில் அவர் பேசி இருக்கிறார். இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த ரசிகர் ஒருவர் ‘படிக்காம ஜெயிச்ச பத்துப்பேர் இருந்தா, படிச்சி ஜெயிச்ச பத்து லட்சம் பேர் இருக்காங்க’ என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு பதிலளித்துள்ள வனிதா ‘ பத்து லட்சத்தில் ஒருத்தன விட 10 பேர்ல ஒருத்தியா இருப்பா, நட்சத்திரம் போல அவள் ஜொலிப்பால்’ என்று பதிவிட்டு இருந்தார். ஆனால், அந்த பதிவை நீக்கிவிட்டார் வனிதா.

Advertisement