சூப்பர் ஸ்டார், பவர் ஸ்டாரின் வரிசையில் வனிதாவுக்கு ஸ்டார் பட்டம் – போஸ்டரை கண்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்.

0
1027
power
- Advertisement -

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வனிதா, பவர் ஸ்டாரை திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைதளத்தில் படு வைரலாக பேசப்பட்டு வந்தது. ஏற்கனவே இரண்டு முறை திருமணம் மற்றும் ஒரு முறை பிரேக்கப் ஆன வனிதா கடந்த சில நாட்களுக்கு முன்னர் வட இந்தியர் ஒருவருடன் தனது நான்காம் திருமணத்தை முடித்துவிட்டதாக சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியானது. மேலும், அவர் ஒரு பைலட் என்றும் 3மாதத்திற்கு ஒரு முறை தான் வனிதாவை வந்து சந்தித்து வருகிறார் என்றும் கூறப்பட்டது.

-விளம்பரம்-

இந்த செய்தி வெளியான பின்னர் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார் வனிதா. அதில், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பதோடு அப்படி ஒரு நபர் யார் என்றே எனக்குத் தெரியாது. கோயிலுக்கு சாமி கும்பிடப் போனால்கூட குற்றமா, உடனே அவர்களுக்குத் திருமணம் என யாராவது சொன்னால் அதை செய்தியாக்கிவிடுவது தவறில்லையா? என்று கூறி இருந்தார்.

இதையும் பாருங்க : கசமுசா காட்சிகளால் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடிக்க மறுத்துள்ள அஜித் பட நடிகை.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் தான் இவர் பவர் ஸ்டாருடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். இதனால் இவருக்கும் பவர் ஸ்டாருக்கும் திருமணம் முடிந்துவிட்டதாக செய்திகள் பரவியது. பின்னர் தான் தெரிந்தது அது ‘பிக்கப் டிராப்’ படத்தின் போட்டோ ஷூட் என்று. இந்த படத்தின் போஸ்டரில் வனிதாவிற்கு வைரல் ஸ்டார் என்று பட்டம் இருப்பதை கண்டு பலரும் கலாய்த்து வருகின்றனர்

இப்படி ஒரு நிலையில் வனிதாவிற்கு ஏன் வைரல் ஸ்டார் என்று பெயர் கொடுத்தீர்கள் என்று பவர் ஸ்டாரிடம் கட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த பவர் ஸ்டார், நான் அவருக்கு அந்த பெயரை கொடுக்கவில்லை. இந்த படத்தின் தயாரிப்பாளர் தான் அவருக்கு வைரல் ஸ்டார் என்று பட்டம் நல்லா இருக்கும் என்று இப்படி போஸ்டரில் போட்டுள்ளார் என்று கூறியுள்ளார் பவர் ஸ்டார்.

-விளம்பரம்-
Advertisement