சமீபத்தில் பிறந்த தனது மகனின் புகைப்படத்தையும் மகனின் பெயரையும் அறிவித்து உள்ளார் நடிகை நீலிமா. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் நீலிமா ராணி. உலக நாயகன் கமல் நடித்த தேவர் மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நீலிமா ராணி. அதன் பின்னர் இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.பின் டும் எனும் படத்தின் மூலம் துணை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார்.
மேலும், இவர் பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து உள்ளார். அதோடு இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பல மொழி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் இதுவரை 15 க்கும் மேற்பட்ட தமிழ் மெகா சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடைசியாக இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரண்மனை கிளி என்ற தொடரில் நடித்து இருந்தார்.
இரண்டாம் முறையாக கர்ப்பம் :
இதனிடையே நீலிமா அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடன் சீரியலில் நடித்த அஷ்வின் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவருக்கு அழகான ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் நீலிமா இரண்டாவது முறையாக கர்ப்பமாகஇருந்தார். கர்ப்பமாக இருக்கும் போது அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி இருந்தார். அதவும் இதுவரை யாரும் செய்யாத வித்தியாசமாக மேட்டர்னிட்டி போட்டோ ஷூட் நடத்தியிருந்தார்.
நீலிமா நடத்திய போட்டோ ஷூட் :
அந்த புகைப்படத்தில் நீலிமா தாமரைமேல் ஒரு அழகான கர்ப்பிணி அம்மனாக இருக்கும் அவதாரத்தில் இருந்தார். இதை பார்த்து பலரும் நீலிமாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் . மேலும், இந்த போட்டோஷூட்டை எடுத்த போட்டோகிராபர் ஆர்.பிரசன்னா வெங்கடேஷ் கூறியது, இந்த போட்டோ ஷூட் எடுப்பதற்கு காரணம் ஒரு பெங்காலி ஓவியரின் படம் பார்த்து தோன்றியது தான்.
சமீபத்தில் பிறந்த மகன் :
எல்லோருக்கும் உயிர் கொடுத்தது அம்மா என்பதால் தாய்மையை வலியுறுத்தி சிவன்-பார்வதி கான்செப்டில் இந்த போட்டோ ஷூட் பண்ணோம். ஒரு மாதத்துக்கு முன்னாடியே இதற்கான திட்டமிடல் எல்லாம் ஆரம்பிக்க தொடங்கியது. திட்டமிடல் எல்லாம் சரியாக நடந்தால் இந்த மொத்த போட்டோ சூட்டையும் அரை நாளில் எடுத்து முடிந்துவிட்டது. தாமரை மலர்களை எல்லாம் தெர்மாகோல் அட்டைகளால் தத்ரூபமாக பண்ணி இருந்தார்கள்.
மகனின் பெயரை அறிவித்த நீலிமா :
இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நீலிமாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. கிட்டத்தட்ட திருமணம் ஆகி 13 ஆண்டுகள் கழித்து இரண்டாம் குழந்தையை பெற்றெடுத்தார் நீலிமா. இப்படி ஒரு நிலையில் நேற்று புத்த பௌர்ணமியை முன்னிட்டு தனது மகனின் பெயரை அறிவித்துள்ளார் நீலிமா. தனது மகனுக்கு அத்வைத்தா என்று பெயர் வைத்துள்ளார். மேலும், தனது மகனுடன் எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.