நீங்க சொல்றதெல்லாம் நம்பறதுக்கு நான் பீட்டர் பால் கிடையாது – வனிதாவை வச்சி செய்த KPY பாலா.

0
2169
vanitha
- Advertisement -

சமூக வலைதளத்தில் தற்போது வேண்டுமானால் மீரா மிதுன் ஹாட் டாபிக்காக இருந்து வந்தாலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமணம் தான். நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதா, பீட்டர் பவுல் என்பவரை மூன்றாம் முறையாக திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-

வனிதா மூன்றாம் திருமணம் செய்துகொண்ட பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் இருந்த நிலையில் விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக பீட்டர் பவுலின் மனைவி எலிசபெத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த விஷயம் சமூக வலைதளத்தில் சில காலம் பேசும் பொருளாக இருந்து வந்தது.

- Advertisement -

இந்த விஷயத்தில் பல்வேறு பிரபலங்களும் தங்கள் கருத்தை தெரிவிக்க பின்னர் அது குழாய் அடி சண்டை ரேன்ஜிக்கு மாறியது. பின்னர் எத்தனையோ பிரச்சனைக்கு பின்னர் இந்த பிரச்சனை ஓய்ந்தது. என்னதான் வனிதா, பிரச்சனைகளில் சிக்கினாலும் அவரை விஜய் டிவி தொடர்ந்து ஆதரித்து வருகிறறது.

சமீப காலமாக விஜய் டிவியில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் வனிதா சமீத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நம்மவர் கமல்’ என்ற நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார். அப்போது அவரை கே பி ஒய் பாலா பங்கமாக கலாய்த்து இருக்கிறார். அந்த வீடீயோவை விஜய் டிவியே வெளியிட்டுள்ளது.

-விளம்பரம்-
Advertisement