சினிமாவைப் பொறுத்தவரை ஒரு சில படங்களில் நடிகைகளை விட நடிகைகளுக்கு தோழியாக வரும் நடிகைகள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகிறார்கள். எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயனின் முதல் காதலியாக வரும் நடிகை, தலைவா படத்தில் விஜய் காதலிக்கும் பெண்ணாக வரும் நடிகை என்று இப்படி இந்த துணை நடிகைகளின் லிஸ்ட் நீண்டு கொண்டேதான் செல்கிறது. அந்த வகையில் நடிகை மிஷா கோஷல் ஒருவர்.
தமிழில் நீங்கள் இவரை பல படங்களில் கதாநாயகிகளின் தோழியாக பார்த்திருக்கலாம். இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானது சேரன் இயக்கத்தில் வெளியான பொக்கிஷம் திரைப்படத்தின் மூலமாகத்தான். இந்த படத்தில் பத்மபிரியாவின் தங்கையாக நடித்து இருப்பார். அந்த படத்தை தொடர்ந்து தமிழில் நான் மகான் அல்ல, ஏழாம் அறிவு, முகமூடி போன்ற பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அதிலும் குறிப்பாக அட்லி இயக்கிய ராஜாராணி படத்திலும், மெர்சல் படத்தில் இவர் நடித்திருக்கிறார். ராஜாராணி படத்தில் நயன்தாராவின் எதிர்வீட்டு பெண்ணாகவும் மெர்சல் படத்தில் சமந்தாவின் தோழியாகவும் நடித்திருக்கிறார் மிஷா கோஷல். அதுபோக தற்போது கைதி பட வில்லன் அர்ஜுன் தாஸ் நடித்துவரும் அந்தகாரம் படத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார் மிஷா கோஷல்.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அம்மணி அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் நடிகைகள் பலரும் பிளாக் அண்ட் ஒயிட் என்ற சேலஞ்ச் பெயரில் கருப்பு வெள்ளை புகைப்படங்களை வெளியிட்டது போல இவரும் ஒரு கருப்பு வெள்ளை புகைப்படத்தை வெளியிட்டார். இதனை கண்டு ரசிகர்கள் சிலர் நிஜமாகவே டிரஸ் போட்டு இருக்கீங்களா என்று வைத்துள்ளார்கள்.