நரகத்திற்கு செல்ல வேண்டியவர்களை எரிக்க வந்திருக்கிறேன் – காளி கெட்டப்பில் வனிதா வெளியிட்ட புகைப்படம்.

0
1476
vanitha
- Advertisement -

பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமானார்.வனிதாவிற்கு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி பின்னர் அந்த இரண்டு திருமணம் விவாகரத்தில் முடிந்தது அனைவரும் அறிந்த விஷயம் தான். அதன் பின்னர் இவர் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் உடன் காதலில் இருந்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் பிரிந்துவிட்டார்கள்.

-விளம்பரம்-

திருமணத்திற்கு பின் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சினிமாவில் இருந்து விலகினார். இவருக்கு ரீ- என்ட்ரி கொடுத்தது விஜய் டிவி தான். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் பிரபலமடைந்த வனிதா பின்னர் விஜய் டிவியின் பல நிகழ்சகளில் பங்கேற்றார். அந்த வகையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்.

- Advertisement -

இந்த நிகழ்ச்சியில் இவருக்கு ஜோடியாக சுரேஷ் சக்ரவர்த்தி இணைந்துள்ளார். நேற்று தான் முதல் முறையாக இவர்கள் இருவரும் இணைந்து இந்த நிகழ்ச்சியில் நடனமாடினார்கள். ஆனால், இவர்கள் ஆடியதற்கு சுமாரான கமெண்ட்ஸ் தான் கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் முதல் எப்சிடோடில் வனிதாவிற்கு ஜோடி இல்லாமல் தான் இருந்தது. இதனால் வனிதா தனியாக தான் ஆடினார்.

நடனம் ஆடினார் என்பதை விட பஞ்ச் வசனம் தான் அதிகம் பேசினார் வனிதா. வனிதாவின் நடனத்திற்கு கமன்ட் சொன்ன ரம்யா கிருஷ்ணன், எனக்கு டான்ஸ் நிறைய இருக்கனும் என்று கூறி சிரித்தார். அதற்கு வனிதா, இன்ட்ரோ என்பதால் கொஞ்சம் இப்படி பண்ணிட்டேன் என்று கூறி இருந்தார். இப்படி இந்த வாரம் கொல்கத்தா காளி வேடத்தில் நடனமாட இருக்கிறார். காளி கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் வனிதா.

-விளம்பரம்-
Advertisement