வெறுப்பர்களுக்கு கிண்டல் செய்பவர்களுக்கு இது தான் செருப்படி.. கோபமாக வீடியோவை பதிவிட்ட வனிதா..

0
12056
Vanitha

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மிகவும் கோலாகலமாக நிறைவடைந்தது. 17 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் முகென் முதலிடத்தையும் சாண்டி இரண்டாவது இடத்தையும் பெற்றிருந்தார்கள். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான சில போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அந்த வகையில் பிரபல நடிகையான வனிதாவும் ஒருவர். இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வனிதா. இது மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மூத்த மகள் தான் வனிதா என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பதாகவே வனிதாவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஏற்பட்ட பிரச்சனை ஊடகங்களில் மிகவும் வைரலாக பரவி வந்தது. மேலும், விஜயகுமாருக்கு சொந்தமான வீட்டில் தங்கி வனிதாவை வனிதாவை போலீசார் காலி செய்ய முயன்றபோது நடுரோட்டில் நின்று கொண்டு போலீசார்கள் இடமே வனிதா நைட்டியை மடித்துக் கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனால் வனிதா என்றாலே மிகவும் சர்ச்சையான பேர்வழிதான் என்ற ஒரு தோற்றம் வனிதாவிற்கு உருவானது. இப்படிப்பட்ட ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் வனிதா. பிக் பாஸில் கலந்து கொண்ட முதல் நாளிலிருந்தே மற்ற போட்டியாளர்களை வச்சி செய்து வந்தார் வனிதா.

இதையும் பாருங்க : விஜய், அஜித் பாடலுக்கு பிக் பாஸ் கொண்டாட்டத்தில் கவின் ஆடிய நடனம்.. லீக்கான வீடியோ.!

- Advertisement -

இந்த சீசன் மிகவும் பரபரப்பாக சென்றதற்கு காரணம் வனிதா தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. பிக்பாஸ் ஆரம்பித்த நாள் முதலே மற்ற போட்டியாளர்களை அடிக்கடி சண்டை இட்டுக்கொண்டு பிக்பாஸ் வீட்டை பரபரப்பாகவே வைத்து வந்தார் வனிதா. இதனால் இவர் மீது ரசிகர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு இவர் நாமினேஷன் இடம்பெற்ற போது இவருக்கு வாக்களிக்காமல் இவரை வெளியேற்றினார்கள். ஆனால், வனிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து சென்ற பிறகு பிக் பாஸ் வீட்டில் மிகவும் சுவாரசியமாக இல்லை என்றும் இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் வனிதா கலந்து கொள்ள வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் கோரிக்கைகள் வலுத்து வந்தன. இதனால் பிக்பாஸ் வைல்ட் கார்டு போட்டியாளராக மீண்டும் கொண்டு வந்தனர.

எதிர்பார்த்தது போல வனிதாவின் ரீ என்ட்ரிக்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியது. மேலும், பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்ற வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரசியமாக சென்று அதற்கு நான் தான் காரணம் என்றும் அடிக்கடி மார்தட்டிக் கொண்டு வந்தார். வனிதாவுக்கு பலர் ரசிகர்களாக இருந்த வந்தாலும் வனிதாவை பிடிக்காதவர்கள் தான் சமூகத்தில் மிகவும் அதிகமாக இருந்து வருகிறார்கள். இதனால் வனிதாவை கிண்டல் செய்து பல்வேறு மீம்கள் பரவி வந்தது. அதேபோல ஒரு சில ரசிகர்கள் இவரை சமூகவலைதளத்தில் கடுமையாக திட்டி தீர்த்து வருகிறார்கள். இந்த நிலையில் தன் மீது எழும் விமர்சனங்களை வனிதா பதிலடி கொடுத்துள்ளார்

-விளம்பரம்-

சமீபத்தில் வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார் அந்த வீடியோவில் பிரபல பாடகி ஒருவர் சமூகவலைதளத்தில் தன்னை ரசிகர்கள் திட்டி கமன்ட் செய்ததை வைத்து மிகவும் வித்யாசமான பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த பாடலை பகிர்ந்துள்ள வனிதா, சமூக வலைத்தளத்தில் தன்னை இருப்பவர்களுக்கும் கிண்டல் செய்பவர்களுக்கும் இது ஒரு செருப்படி என்றும், உங்களுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்காதீர்கள் உங்கள் வாழ்க்கையை நீங்கள் பாருங்கள். பயனற்ற நபர்களுக்கு எப்படி பதில் அளிக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம், என்று பதிவிட்டுள்ளார்வனிதா. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement