பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமாவிற்கு என்ட்ரி கொடுக்கும் வனிதா மகன் – ப்பா, இப்போ எப்படி இருக்கார் பாருங்க.

0
1557
Vanitha
- Advertisement -

சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் தான் வனிதா. இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் மட்டும் தான் நடித்தார். பின் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். மேலும், இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் வேற லெவல் பிரபலமானார் என்று சொல்லலாம். அதற்கு பிறகு இவரைக் குறித்து பல செய்திகள் சோஷியல் மீடியாவில் வந்த வண்ணம் இருந்தது. அதோடு இவரை பலரும் வத்திக்குச்சி வனிதா என்று தான் அலைகிறார்கள்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். ஆனால், இவருக்கும் நிகழ்ச்சியின் நடுவராக இருந்த ரம்யா கிருஷ்ணனுக்கு சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டு பின்னர் இவர் பாதியிலேயே அந்த நிகழ்ச்சியை விட்டு விலகி இருந்தார். ஆனாலும், இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் படங்கள், சீரியல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் இவர் தமிழ் திரைப்படம் ஒன்றுக்காக ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ளார்.

- Advertisement -

வனிதா நடித்த படங்கள்:

இந்த படத்தை தவசிராஜன் இயக்கி தயாரித்து வருகிறார். இதனை தொடர்ந்து நடிகை வனிதா அவர்கள் அனல்காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லிருந்தா போராடு, பிக் கப் டிராப் போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் தற்போது இவர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த பிக் பாஸ் வீட்டை 24 மணி நேரமும் பார்க்கலாம். இதில் இவர் கலந்து கொண்டு வேற மாதிரி செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் வனிதாவின் மகன் சினிமாவில் கால் தடம் பதிக்க போகும் செய்தி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வனிதாவின் குடும்ப வாழ்கை:

வனிதா சினிமா உலகிலும், சோசியல் மீடியாவிலும் பிசியாக இருந்தாலும் இவருடைய குடும்ப வாழ்க்கையில் தோல்வியைத்தான் சந்தித்து இருக்கிறார். வனிதாவிற்கு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி பின்னர் அந்த இரண்டு திருமணம் விவாகரத்தில் முடிந்தது அனைவரும் அறிந்த விஷயம் தான். அதன் பின்னர் இவர் இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் உடன் காதலில் இருந்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் பிரிந்து விட்டார்கள். அதன் பின்னர் தனது இரண்டு மகள்களுடன் வனிதா தனியாக வசித்து வந்தார். பின் வனிதா கடந்த ஆண்டு பீட்டர் பவுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு பின்னர் அவரையும் விட்டு பிரிந்து வந்தார். இப்படி வனிதா மூன்று முறை திருமணம் செய்தும் தோல்வியில் தான் முடிந்து உள்ளது.

-விளம்பரம்-

வனிதாவின் முதல் திருமணம்:

அதுமட்டும் இல்லாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வனிதா வட இந்தியர் ஒருவருடன் தனது நான்காம் திருமணத்தை முடித்துவிட்டதாக சமூக வலைதளத்தில் பல செய்திகள் வெளியானது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இது ஒரு பக்கம் இருக்க, வனிதா கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் வேறு யாருமில்லை சமுத்திரம் படத்தில் சரத்குமாரின் தங்கை கணவராக நடித்திருப்பவர். மேலும், வனிதா மற்றும் ஆகாஷ் தம்பதியருக்கு திருமணம் முடிந்த ஓர் ஆண்டிலேயே ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தார்கள். நன்றாக சென்ற இவர்களது திருமண மகளும் கடந்த 2005ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. அதன் பின்னர் தனது மகனை தன்னுடன் அனுப்பி விட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆகாஷ்.

சினிமாவில் கால்த்தடம் பாதிக்கும் வனிதா மகன்:

இதையடுத்து மகள்கள் அம்மாவுடனும், மகன் தந்தையுடனும் வளர வேண்டும் என்று உத்தரவிடபட்டது. அதன் பின் ஸ்ரீஹரி தன் தாத்தா விஜயகுமார் உடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது வனிதாவின் மகன் ஸ்ரீஹரி சினிமாவில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீஹரி சினிமா துறை சம்பந்தமான படிப்பு படித்து வருகிறார். அதோடு இவர் ஷார்ட் பிலிம் ஒன்றை இயக்கி நடித்திருந்தார். தற்போது அவருடைய புகைப்படம் வெளியாகியுள்ளது. இதை பார்த்து பலரும் அனிதாவிற்கு இவ்ளோ பெரிய மகனா! என்று கேட்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் ஸ்ரீஹரி ஏற்கனவே கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement