இப்பவும் அவ என் பொண்ணு மாதிரி தான், ஆனா அவ வெளிய போய் – ஜோவிகா குறித்து பேசிய விசித்ரா.

0
551
- Advertisement -

ஜோவிகா குறித்து விசித்ரா பேசி இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி சமீபத்தில் தான் கோலாகலமாக முடிவடைந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா சீசனில் ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், அன்னயா, ரவீனா, விசித்திரா, பூர்ணிமா ரவி என்று பலர் கலந்துகொண்டனர்.

-விளம்பரம்-

இந்த சீசனில் மக்களுக்கு பரிச்சயமான நபர்களில் ஒருவர் தான் விசித்திரா. இவர் நிகழ்ச்சியில் நன்றாக தான் விளையாடி இருந்தார். சீனியர் என்ற முறையில் இவர் சொன்ன அறிவுரை எல்லாம் ரசிகர்கள் மத்தியில் பாரட்டை பெற்று இருந்தது.இதுவரை வந்த சீசன்களிலேயே சீனியர் நடிகை 95 நாட்களை கடந்து இருந்தார். அதிலும் ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் அர்ச்சனா மற்றும் தினேஷுக்கு ஆதரவாக விசித்ரா இருந்தார்.

- Advertisement -

இதனால் மேலும் அவருக்கு ஆதரவு கூடியது. ஆனால், கடைசி சில வாரங்களில் இவர் மாயா கேங்குடன் சேர்ந்து தினேஷ் அர்ச்சனாவிற்கு எதிராக திரும்பினார். அதுவே இவரது வெளியேற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருந்தனர். அந்த வகையில் வனிதாவின் மகளும் ஒருவர். வனிதாவிற்கு எந்த அளவிற்கு விமர்சனம் இருந்ததோ அதே அளவு ஜோவிகாவிற்கும் பல விமர்சனங்கள் குவிந்துகொண்டு தான் வருகிறது.

அந்த வகையில் ஜோவிகா, பிக் பாஸ் வீட்டில் பெரும்பாலும் சாப்பிடுவது, தூங்குவது, வழுக்கி விழுவது என்று தான் இருந்து வருகிறார். இந்த சீசன் ஆரம்பித்த முதல் வாரத்திலேயே படிப்பு விஷயத்தில் இவருக்கும் விசித்ராவிற்கும் ஒரு வாக்குவாதமே சென்றது. அப்போது ஜோவிகா, எனக்கு படிப்பு வராது ஆனால், எனக்கு கார் டயரை கழட்டி ஜாக்கி மாட்ட தெரியும் என்று சம்மந்தம் இல்லாமல் பேசினார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸுக்கு பின் அளித்த பேட்டி ஒன்றில் ஜோவிகா குறித்து பேசிய விசித்ரா ‘பிக் பாஸில் இருந்து அவள் வெளியே போன போது கூட அனைவரும் நீங்கள் fake என்று சொல்கிறார்கள் ஆனால் நீங்கள் அப்படி கிடையாது நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள் என்று சொல்லிவிட்டு சென்றவன் வெளியே சென்றதும் சோசியல் மீடியாவை பார்த்து அப்படியே மாறிவிட்டாள்.

அவள் எனக்கு பொண்ணு மாதிரி தான். இப்போதும் அவள் மீது எனக்கு எந்த வித வெறுப்பும் கிடையாது. டைட்டில் வென்று விடுவோம் என்று ஆசையோடு வந்த அவள் வெளியேறியது அவளுக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கும். அதே போல வனிதாவும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அவர் இரண்டு முறை பிக்பாஸிற்கு வந்திருக்கிறார் பிக் பாஸில் எதுவும் நம்ம கையில் இல்லை என்பதை அவரைவிட வேறு யாரும் புரிந்து கொள்ள முடியாது

Advertisement