தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். கடைசியாக சிவகார்த்திகேயன் அவர்கள் மாவீரன் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று பாக்ஸ் ஆபிசில் இடம் பிடித்து இருக்கிறது.சிவகார்த்திகேயன் பற்றி இணையத்தில் பல விஷயங்கள் கொட்டிக்கிடந்தாலும் அவர் நாதஸ்வர வம்சா வழி வாரிசு என்பது பலர் அறிந்திறாத விஷயம்.
இந்தியாவோட தலைசிறந்த நாதஸ்வர கலைஞர்கள் ஆன சுப்பிரமணியம் பிள்ளை, நீடாமங்கலம் தவில் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இருவரும் சிவகார்த்திகேயனின் கொள்ளுத்தாத்தாக்கள். அதேபோல் ‘திருவீழிமிழலை சகோதரர்கள்’ என பேர் வாங்கிய கோவிந்தராஜப் பிள்ளை, தட்சிணாமூர்த்தி பிள்ளை ஆகிய இருவரும் சிவகார்த்திகேயனின் தாத்தாக்கள்.கீர்த்தனைகளை வாயால் பாடுவது போன்று நாகஸ்வரத்தில் இசைத்தவர்கள் முற்காலத்தில் அதிகம்.
அண்மைக் காலம் முதல் இன்று வரை அவ்வகையைச் சேர்ந்தவர்களை விரல் விட்டு எண்ணத்தான் வேண்டும். அந்த வகையில் ஸாஹகத்தியமாகவே கற்று முதலில் பலமுறை பாடிப்பாடி மெருகேற்றியப் பின்னர் நாகஸ்வரத்தில் வாசித்த வித்வான்களில் குறிப்பிடத்தக்கவர்கள் திருவீழிமிழலை சகோதரர்கள் என்ற பெயரில் வரலாறு படைத்த சுப்பிரமணிய பிள்ளையும், நடராஜசுந்தரம் பிள்ளையும். இவர்களுடைய இசை மரபுக்குச் சிறிதும் பிழைபடுவதில்லை.
திருவீழிமிழலை ஸ்வாமிநாத நாகஸ்வரக்காரர், சிவபாக்கியம் அம்மாள் என்போர், இவரைப் பெற்றவர்கள். இவர்கள் தந்தையிடம் தொடங்கிப் பின்பு, தாய் மாமன் சுப்பையா பிள்ளையிடம் நாகஸ்வரம் பயின்று தன் இளவல் நடராஜசுந்தரம் பிள்ளையுடன் இணைந்து கச்சேரிகள் செய்ய ஆரம்பித்துப் புகழேணியின் உச்சியை இவர் விரைவில் எட்டினார். இவர்கள் சிறந்த பாடகர், மற்றும் ஏராளமான கீர்த்தனைகளைப் புனைந்துள்ளார்கள்.
தமிழகம் மட்டுமின்றிக் கர்நாடகம், ஆந்திரம், கேரளம், மற்றும் வடஇந்தியா எங்கும் “திருவீழிமிழலை சகோதரர்கள்” நாகஸ்வரக் கச்சேரிகள் இடம் பெறாமல் இருந்ததில்லை. சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயனின் சொந்த சித்தப்பா எங்களுடைய அப்பா, அவர்களுடைய அப்பா அதாவது தாத்தா எல்லாம் மிகப் பெரிய நாதஸ்வர வித்வான்கள். முதன்முதலாக இரட்டை நாதஸ்வரம் வைத்து வாசித்தது எங்களுடைய குடும்பம் தான்.
அதற்காக பல விருதுகளைப் பெற்றிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை எங்களுடைய குடும்பம் பல விருதுகள் வாங்கி இருக்கிறது. சிவகார்த்திகேயனும் அவருடைய அப்பாவைப் போலவே இளகிய மனம் கொண்டவர்.என்னுடைய அண்ணன் பலருக்கு உதவி செய்திருக்கிறார். அதேபோல் சிவகார்த்திகேயனும் தன்னால் முடிந்ததை பலருக்கு செய்துகொண்டிருக்கிறார் என நினைத்தால் பெருமையாக இருக்கிறது’ என்று கூறி இருந்தார்.