மாட்டு பொங்கல் அன்னிக்கி Beef கேப்பீங்களா – விமர்சனத்திற்கு உள்ளான போட்டியாளர். வைரலாகும் வீடியோ.

0
340
vikraman
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன், ரச்சித்தா,adk ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது அசீம், விக்ரமன், ஷிவின், மைனா நந்தினி, அமுதவனான்,என்று 5 பேர் மட்டும் விளையாடி வருகின்றனர்.

-விளம்பரம்-

கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவனான்,ரச்சிதா,Adk என்று 7 பேர் நாமினேஷ் ஆகி இருந்தனர். இதில் கடந்த வார நிகழ்ச்சியில் ரஷிதா வெளியேறி இருந்தார். அதே போல இறுதி வாரம் என்பதால் இந்த வாரம் அனைத்து போட்டியாளரும் நாமினேட் ஆகி இருந்தார்கள். இதில் கடந்த ஞாயிற்று கிழமை Adk வெளியேறி இருந்தார்.

- Advertisement -

மேலும், நேற்றய நிகழ்ச்சியில் ரசிகர்கள் மற்றும் போட்டியாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பணப் பை டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. பொதுவாக பணப் பெட்டி டாஸ்க் மிகவும் சுவாரசியமாக இருக்கும் பிக் பாஸ் ஒவ்வொரு கட்டமாக தொகையை ஏற்றிக்கொண்டு இருக்க அதை யார் எடுத்தச் செல்வார் என்ற ஒரு ஆர்வம் ஏற்படும். அந்த வகையில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட பணப் பை டாஸ்க் ஒரு சில நாட்கள் நீளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆரம்ப தொகையான 3 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார் கதிர்.

இதைத் தொடர்ந்து பொங்கல் திருநாளை முன்னிட்டு இறுதி வாரத்தில் இருக்கும் ஐந்து போட்டியாளர்களுக்கும் பிக் பாஸ் விருந்துகளை அனுப்பி வைத்திருந்தார். அதற்கு முன்பாக தங்களுக்கு பிடித்த உணவுகளை கேமரா முன்பு சென்று போட்டியாளர்கள் பலரும் கேட்டிருந்தார்கள். அந்த வகையில் விக்ரமன் கேமரா முன் சென்று தனக்கு ஒரு Beef பிரியாணி, ரைத்தா, பிரட் அல்வா போன்றவை வேண்டும் என்று கேட்டு இருந்தார்.

-விளம்பரம்-

விக்ரமன் பிக் பாஸ் இடம் மாட்டு கரி கேட்டு இருக்கும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு சிலர் தமிழர் திருநாளான மாட்டுப் பொங்கல் என்று மாட்டு கறி கேட்பீர்களா என்று விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால், மற்றொருபுறம் மாட்டுக்கறி என்பது ஒரு அரசியல் சார்ந்த கருத்துக்களை கொண்ட உணவு அதில் ஏகப்பட்ட அரசியல் இருக்கிறது அதனால் தான் விக்ரமன் அப்படி கேட்டார் என்றும் கூறி வருகிறார்கள்.

பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறையாக இந்த சீசனில் தான் ஒரு அரசியல் பிரபலம் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். விக்ரமன், விடுதலை சிறுத்தை கட்சியின் உறுப்பினர் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். மேலும், அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் கூட மாட்டு இறைச்சி அரசியல் குறித்து பல மேடைகளில் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இப்படி பல லட்சம் பேர் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் தைரியமாக மாட்டுக்கறியை பற்றி விக்ரமன் பேசி இருப்பது ஒரு பக்கம் பாராட்டையும் ஒரு பக்கம் விமர்சனத்தையும் பெற்று வருகிறது.

Advertisement