பிக் பாஸ் பட்டத்தை விக்ரமன் ஏன் வென்று இருக்க வேண்டும் ? அவர் பிக் பாஸில் செய்தது என்ன. ஒரு பின்னோட்ட பார்வை

0
354
vikraman
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் நேற்றோடு நிறைவடைந்தது. 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன்,ரச்சித்தா ஆகியோர் வெளியேறிஇருந்தனர். இறுதி வாரத்தில் கதிரவன், அமுதவாணன் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய 5 பேர் மட்டும் இறுதி வாரத்தில் இருந்தனர்.

-விளம்பரம்-

பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு அமுதவாணன் வெளியேறிய நிலையில் மைனா நந்தினி கடைசி போட்டியாளராக வெளியேற்றப்பட்டார்.இதன் மூலம் இந்த சீசனில் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூன்று பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி ஆகிஇருந்தனர். ஒருபுறம் அசின் வெல்வார் என்றும் மறுபுறம் விக்ரமன் வெல்வார் என்றும் எதிர்பார்த்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த சீசன் பட்டத்தை அசீம் வென்றார். இவரை தொடர்ந்து விக்ரமன் இரண்டாம் இடமும் ஷிவினுக்கு மூன்றாம் இடமும் வழங்கப்பட்டது. முதல் இடத்தை பிடித்த அஸீமிற்கு 5000000 ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

- Advertisement -

பட்டத்தை வென்ற அசீம் :

விக்ரமன் தான் வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்துவந்தனர். இப்படி ஒரு நிலையில் அசீம் வென்றதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த முடிவால் அதிருப்தி அடைந்து இருக்கின்றனர். அப்போ அடாவடியாக ஆடி, மற்றவர்களை இழிவுபடுத்தி விளையாடினால் பிக் பாஸில் வென்று விடலாமா என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், விஜய் டிவிக்கு எதிராக Boycott விஜய் டிவி என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வரும் ரசிகர்கள் விக்ரமன் ஹேஷ் டேக்கையும் ட்ரெண்ட் செய்து இருக்கின்றனர்.

விக்ரமன் செய்தது என்ன :

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமன் வெற்றியாளராக தகுதியுடையவர் என்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அதில் ‘மனிதக் கழிவுகளை மனிதர்களை வைத்து அகற்றக் கூடாது இயந்திர பயன்பாடு கொண்டு வர வேண்டும். அதற்கான சிந்தனையை வளரச் செய்ய வேண்டும் என்று ஒரு குறு நாடகம் மூலம் பேசி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் சமையல் குழுவில் முழுமையாக ஆண்களாக மாறிய போது பெண்களிடம் உங்களுக்கு சமையலறையில் இருந்து விடுதலை கிடைத்து விட்டது என்று பெண் விடுதலையை பேசியிருக்கிறார்.’

-விளம்பரம்-

பட்டத்தை ஏன் விக்ரமன் வென்று இருக்க வேண்டும் :

ஒரு திருநங்கையை எல்லோரும் பாகுபாட்டோடு வெறுப்புணர்வோடு அனுகிய போது அவரோடு நின்று பாலின பாகுபாடு இல்லாமல் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களை மட்டுமல்லாது வெளியில் இருக்கும் பலரையும் உணர செய்திருக்கிறார்.வீட்டின் உள்ளே நடக்கும் சண்டையிலோ, வாக்குவாதத்திலோ, பாதிக்கப்பட்டோரின் பக்கமே நின்று பேசி இருக்கிறார். மனிதர்கள் சமத்துவமாக வாழ வேண்டுமென்றால் சாதி, மதம், இனம், மொழி போன்ற அடையாளங்களை கொண்ட பாகுபாடுகளை போக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார்.

சமூக நீதி குறித்து பேசிய விக்ரமன் :

யாரேனும் ஒருவர் தன்னை உயர்த்தி பிறரை தாழ்த்தி பேசும் போது அங்கே உயர்வு தாழ்வு என்ற முரண்பாட்டை உடைப்பதில் உறுதியாக நின்று இருக்கிறார். தமிழ்நாட்டின், தமிழர்களின் பெருமைகளை உரக்கப் பேசி இருக்கிறார்.தனக்கு கிடைத்த பிக் பாஸ் மேடையில் சமூக நீதி குறித்தும் சமூக மாற்றத்திற்கான தேவை குறித்தும் ஒவ்வொரு இடங்களிலும் தொடர்ந்து பேசியிருக்கிறார். வலுவாக பேசிக் கொண்டே இருந்தார்.

ரசிகர்கள் வருத்தம் :

இதுவரையில் பிக் பாஸ் போன்ற ஒரு நிகழ்ச்சியில் சமூகநீதி கருத்துகளை பேசியது இல்லை. இதுவே முதல் முறை. இதனை பேசும் Vikraman வெற்றி பெற வேண்டும் என்று அறத்தின் பக்கம் நின்று யாரும் ஓட்டுக் கேட்டதில் தவறில்லை. கண்டிப்பாக அவருக்கு வெற்றியாளருக்கான பல தகுதிகள் இருந்தது. அப்படி இருந்தும் பிக் பாஸ் பட்டத்தை ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளர் வென்றது வருத்தமே.

Advertisement