உங்கள பெருமையா சொன்ன Thanks சொல்லுறீங்க – பூர்ணிமாவை வச்சி செய்த வினுஷா. வழக்கம் போல சம்மந்தம் இல்லாமல் சமாளித்த பூர்ணிமா.

0
362
Vinusha
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 102 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா சீசனில் ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், அன்னயா, ரவீனா, விசித்திரா, பூர்ணிமா ரவி ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். இன்னும் இந்த நிகழ்ச்சி சில நாட்கள் தான் இருக்கிறது. இதில் யார் டைட்டில் பட்டதை வெற்றி பெறுவார்கள்? என்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் உடைய கடைசி வாரம் என்று சொல்லலாம்.

- Advertisement -

பிக் பாஸ் 7:

தற்போது பிக் பாஸ் வீட்டில் விஷ்ணு, மாயா, விஜய் வர்மா, மணி, தினேஷ், அர்ச்சனா ஆகிய ஆறு பேர் இருக்கிறார்கள். இதில் நேற்று மிட் வீக் எவிஷனில் விஜய் வர்மா வெளியேறி இருக்கிறார். மேலும், ஓரிரு நாட்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த வினுஷா தேவி தன்னை உருவகேலி செய்த நிக்சன், அர்ச்சனா, பூர்ணிமா எல்லோரையும் வெளுத்து வாங்கி இருக்கிறார்.

பூர்ணிமா-வினுஷா உரையாடல்:

அந்த வகையில் நிக்சன் செய்த உருவ கேலி குறித்து பூர்ணிமாவிடம் சொன்னதற்கு வினுஷா, நிக்சன் பேசியதை ஜஸ்ட் ஜோக் என்று நீங்கள் சொன்னீர்கள். அது எனக்கு ஜோக் இல்லை என்று கூறினார். உடனே பூர்ணிமா, எந்த இடத்தில் நான் ஜோக் என்றேன் என்று கேட்டிருக்கிறார். அதற்கு வினுஷா, நீங்கள் மேக்கப் ரூமில் நிக்சன் விஷயத்தை மட்டும் இல்லாமல் நிறைய விஷயங்களை பேசினீர்கள் என்று சொல்ல நான் ஏன் ஒருவர் உருவ கேலி செய்தவரை சப்போர்ட் செய்யப் போகிறேன் என்று பூர்ணிமா பேசியதை வினுஷா ஏற்றுக்கொள்ளவே இல்லை.

-விளம்பரம்-

நிக்சன்-வினுஷா உரையாடல்:

பின் நிக்சனிடம் இது தொடர்பாக வினுஷா பேசுகிறார். அப்போது வினுஷா, நான் பேசியதை வெளியே தப்பாக பரப்பி இருக்கிறார்கள். அதனால் மன்னிப்பு கேட்டுகிறேன் என்று கூறினார். உடனே கடுப்பான வினுசா, வெளியில் தப்பாக காட்டப்பட்டுள்ளதால் நீ மன்னிப்பு கேட்கிறாய் என்றால் அந்த மன்னிப்பை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நீ பேசியது தவறு என்று உணர்ந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே ஏற்றுக் கொள்வேன் என்று பேசி இருக்கிறார்.

அர்ச்சனா-வினுஷா உரையாடல்:

இதற்கு முன் நேற்று எபிசோட்டில் அர்ச்சனாவிடம் வினுஷா, நீங்கள் உங்கள் ஆதாயத்துக்கு என்னை யூஸ் பண்ணிட்டீங்க என்று பேசி இருக்கிறார். உடனே அர்ச்சனா, நான் செய்தது தவறு தான். அதற்காக மன்னிப்பு கேட்கிறேன் என்று பேசி இருக்கிறார். இப்படி வீட்டிற்குள் வந்த உடனே தன்னை பற்றி பேசிய எல்லா போட்டியாளர்களையும் வினுஷா தேவி விடாமல் வெளுத்து வாங்கி இருக்கிறார்.

Advertisement