தினேஷை தொடர்ந்து மோசமாக பேசிய விசித்ராவிற்கு ஆதரவாக ரஷிதா போட்ட பதவு – இன்னும் இவங்ககோபம் குறையலயா?

0
583
- Advertisement -

தமிழில் அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 78 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா, அன்னயா, விஜய் வர்மா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இந்த சீசனில் Wild Card மூலம் உள்ளே நுழைந்தவர் தினேஷ். இவருக்கும் ரஷிதாவிற்கும் இருக்கும் பிரச்சனை அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். தினேஷ் உள்ளே சென்ற நாள் முதலே பலரிடமும் எதிர்ப்பை சம்பாதித்து கொண்டார். அதிலும் கடந்த சில நாட்களாக விசித்ரா மற்றும் தினேஷ் ஆகிய இருவருக்கும் அடிக்கடி சண்டை எழுந்துகொண்டு இருந்தது.அதிலும் கடந்த சில தினங்களாக இருவரும் சரியாக பேசிக்கொள்வது கூட இல்லை.

- Advertisement -

விசித்ராவுடன் தினேஷ் சண்டை போட்ட நாளில் இருந்தே விசித்ராவிற்கு ஆதரவாக தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் ரசிதா. சமீபத்தில் விசித்ரா புகைப்படத்தை பகிர்ந்து சிங்கப்பெண்ணே பாடலை வைத்து ‘The Fighter’ என்று குறிப்பிட்டதோடு Strong Lady, salute போன்ற எமோஜிக்களை போட்டுள்ளார். ரஷிதாவின் இந்த பதிவு தினேஷ் ரசிகர்களை பெரும் கடுப்பில் ஆழ்த்தியது.

ரக்ஷிதாவின் இந்த பதிவை பார்த்த பலர் ஏன் இவ்வளவு வன்மம் என்று கூறி வந்தனர். இப்படி ஒரு நிலையில் ரஷிதா வெளியேறிய பின்னர் தொடர்ந்து அவரை புகழ்ந்து பதிவுகளை போட்டு வந்த ரஷிதா சமீபத்தில் ` உண்மையில் முக்கியமானது என்னவென்றால் இதயங்களை வெல்வது! என் அன்பை வென்றீர்கள். உண்மையில் என் அன்பை மட்டுமல்ல என் ஆன்மாவையும் வென்றீர்கள்’ எனக் குறிப்பிட்டு விசித்ராவை டேக் செய்திருக்கிறார். 

-விளம்பரம்-

ரஷிதா பிக் பாஸில் இருந்த போது அவருக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வந்தார் தினேஷ். மேலும், ரஷிதாவை பலர் troll செய்த போது கூட அவருக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வந்தார். ராபர்ட் விஷயத்தில் கூட ரசிதாவின் பெயர் டேமேஜ் ஆன போதும் தன் மனைவி அப்படிப்பட்டவள் இல்லை என்று கூறினார். அவ்வளவு ஏன் ரஷிதா பிக் பாஸுக்கு செல்லும் முன் ரஷிதாவிற்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். ஆனால், ரஷிதா அதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.

அதே போல family Roundல் தன்னை பார்க்க ரஷிதா வருவாரா என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தார் தினேஷ். ஆனால், தினேஷ் பிக் பாஸ் சென்ற நாள் முதல் ரஷிதா ஒரு வார்த்தை கூட அவரை பற்றி பேசவில்லை. இப்படி ஒரு நிலையில் ரஷிதா, தினேஷை டேமேஜ் செய்யும் விதமாக விசித்ராவிற்கு ஆதரவாக பதிவிட்டு இருப்பதை கண்ட ரசிகர்கள் பலர், இது மிகவும் சீப்பாக இருக்கிறது. தினேஷுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும் இப்படி செய்ய வேண்டாம் என்று கூறி வருகின்றனர்.

Advertisement