நிறைவேறிய ஆசை, மாயா & கோவிற்கு எதிராக போட்ட சபதத்தை நிறைவேற்றிய விஷ்ணு. Thug Lifeங்க

0
383
- Advertisement -

பிக் பாஸ் அர்ச்சனாவிற்காக நடுத்தெருவில் விஷ்ணு செய்திருக்கும் செயல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 106 நாட்கள் கடந்து சமீபத்தில் தான் கோலாகலமாக முடிவடைந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா சீசனில் ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த சீசன் தொடங்கிய நாளில் இருந்து முடியும் வரை அனல் பறக்க பரப்பாக சென்றது. இந்த முறை நிகழ்ச்சியில் பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்திருந்தார்கள். அதில் ஒன்று தான் இரண்டு பிக் பாஸ் வீடு. இந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து போட்டியாளர்கள் மத்தியில் கலவரம், சண்டை, சர்ச்சைகள் தொடங்கியிருந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த அர்ச்சனா தான் டைட்டில் பட்டத்தை வென்று இருக்கிறார்.

- Advertisement -

பிக் பாஸ் 7:

இவரை அடுத்து இரண்டாம் இடத்தை மணி, மூன்றாம் இடத்தை மாயா, நான்காம் இடத்தை தினேஷ், ஐந்தாம் இடத்தை விஷ்ணு பிடித்து இருக்கிறார்கள். டைட்டில் வென்ற அர்ச்சனாவுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் பதினைந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாட் மற்றும் ஒரு காரும் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது. அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆனதற்கு பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

அர்ச்சனா குறித்த தகவல்:

16 லட்சம் வாக்குகளை பெற்று அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆகி இருந்தார். இது பிக் பாஸ் வரலாற்றிலேயே புதிய சாதனை என்று கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இதுவரை வந்த சீசன்களிலேயே வைல்ட் கார்ட் மூலம் நுழைந்து ஒரு நபர் வெற்றி பெற்றது இல்லை. இதுதான் முதல் முறை என்றும், அர்ச்சனா தான் அந்த சாதனையை செய்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

-விளம்பரம்-

பிக் பாஸ் வீட்டில் விஷ்ணு சொன்னது:

இந்த நிலையில் பிக் பாஸ் பிரபலமான விஷ்ணு செய்திருக்கும் செயல் தான் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் டாப் 5 பட்டியலில் விஷ்ணு வந்திருந்தார். இவர் டிக்கெட் டு பினாலே டாஸ்க் வெற்றி பெற்று நேரடியாக பைனலுக்கு வந்தார். இவரும் டைட்டில் பட்டதை வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், இவர் ஐந்தாம் இடத்தை பிடித்திருந்தார்.

விஷ்ணு செய்த வேலை:

மேலும், இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது தினேஷ், அர்ச்சனா, மணி இவர்கள் மூவரில் யார் வெற்றி பெற்றாலும் 10,000 வாலா பட்டாசு வெடிப்பேன் என்று கூறியிருந்தார். தற்போது அர்ச்சனாவிற்கு டைட்டில் பட்டம் கிடைத்தவுடன் நடுத்தெருவில் பட்டாசு வெடித்து விஷ்ணு கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படம் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலருமே, விஷ்ணு சொன்னதை செய்து விட்டாரே! என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement