நாம ரெண்டு பேரும் உறவில் இருக்கலாமா – பெண் போட்டியாளரிடன் ஓப்பனாக கேட்டுள்ள விஷ்ணு

0
155
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 68 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதுவரை இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். பின் வைல்ட் கார்ட் போட்டியாளராக விஜய் வர்மா, அனன்யா பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து இருக்கிறார்கள். கடந்த சில வாரமாகவே பிக் பாஸ் நிகழ்ச்சி அனல் பறந்து கொண்டிருக்கின்றது. மேலும், இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

பிக் பாஸ் 7:

மிக்ஜாம் புலன் காரணமாக பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்க இயலாததால், இந்த வார எலிமினேஷன் ரத்து செய்யப்படுகிறது’ என்று அறிவித்து இருந்தது. நேற்று பிக் பாஸ் வீட்டில் கோல்ட் ஸ்டார் டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த முறை இந்த டாஸ்கில் வெல்பவர்களுக்கு 5 கோல்டு ஸ்டார் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்டார் தங்களுக்கு வேண்டும் என்றும் விவாதிக்கலாம், இல்லை என்றால் யாருக்கும் இந்த ஸ்டார் போக கூடாது என்றும் விவாதிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

நிகழ்ச்சியில் விஷ்ணு:

இதில் விக்ரம் வெற்றி பெற்றார். மேலும், இந்த வார கேப்டனாக விஷ்ணு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். கேப்டன் ஆனதிலிருந்து இவர் கொஞ்சம் திமிராகவும் அடாவடித்தனமாகவும் தான் நடந்திருக்கிறார். குறிப்பாக, விசித்திரா விஷயத்தில் இவர் சண்டை போட்டு இருக்கிறார். அதுமட்டுமில்லாமல்
சில வாரங்களாகவே விஷ்ணு- நிக்சன் மத்தியில் சண்டைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

-விளம்பரம்-

விஷ்ணு குறித்த தகவல்:

நிக்ஸன் கேப்டன் ஆனபோதே விஷ்ணு செயல்களில் மாற்றங்கள் ஏற்பட்டது. பின் விஷ்ணு மீது பூர்ணிமாவிற்கு ஒரு ஈர்ப்பு இருப்பது அறிந்து கொண்டே அதை பயன்படுத்தி விஷ்ணு இந்த வாரம் கேப்டன் ஆனதற்கு ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். இவர் ஆரம்பத்தில் இருந்தே பெண்களிடம் தான் சண்டைக்கு நின்றிருக்கிறார். இந்த நிலையில் விஷ்ணு குறித்து அனன்யா பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது.

விஷ்ணு குறித்து அனன்யா சொன்னது:

அதாவது, விஷ்ணு தன்னிடம் வந்து நாம் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருக்கலாமா? என்று கேட்டார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன் என்று பேசி இருக்கிறார். இதை விஷ்ணு ஒரு கேம் விளையாட தந்திரமாக தான் பயன்படுத்தி வருகிறார் என்றெல்லாம் மற்ற போட்டியாளர்கள் பேசி இருக்கிறார்கள். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து பலருமே விஷ்ணுவை விமர்சித்து கன்னடம் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement