தம்பி ராமையாவின் மகன் தான் யாஷிகாவின் காதலனா..? வெளிவந்த உண்மை..!

0
1843
yashika-Anand
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ‘உன்னை போல் ஒருவன்’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் மற்ற போட்டியாளர் கதாபாத்திரமாக மாறி, அவர்களை போன்றே நடை, உடை, பாவனை அனைத்தையும் செய்ய வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

-விளம்பரம்-

umapathi

- Advertisement -

இந்நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் மஹத் மற்றும் டேனி சமயலறையில் பேசி கொண்டிருந்தனர். அப்போது மும்தாஜ் கதாபாத்திரத்தில் இருந்த மஹத் ”உமாபதி, அடியில பத்தி ‘ என்று கிண்டலாக கூறினார். அதற்கு யாஷிகா கதாபாத்திரத்தில் இருந்த டேனி ‘உமாபதி பற்றி பேச கூடாது,அவன் எங்க வேணுனாலும் போவான். உனக்கு என்ன வந்துச்ச, நீ என்னோட பாய் பிரன்ட்(boy friend)பத்திஎல்லாம் பேச கூடாது’ என்று கூறினார்.

மஹத் மற்றும் டேனி இருவரும் கூறிய ‘உமாபதி ‘ என்ற பெயர் ஒருவேளை யாஷிகாவின் காதலரின் பெயராக இருக்கலாம் என்று சந்தேகம் எழுகிறது. அதே போல பிரபல காமெடி நடிகர் தம்பி ராமைய்யாவின் மகனின் பெயர் கூட உமாபத்தி தான். உமாபத்தி, சமீபத்தில் ‘மணியார் குடும்பம்’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார். அந்த படத்தில் யாஷிகா ஒரு பாடலுக்கும் நடனமாடி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

umapathi

ஒருவேலை அந்த படத்தில் நடித்த போது உமாபதிகும், யாஷிகாவிற்கும் காதல் ஏற்பட்டிருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றுகிறது. அதனால் தான் மஹத், உமாபதி என்ற பெயரை சொன்னதும் யாஷிகா கதாபாத்திரத்தில் இருந்த டேனி ‘என்னுடைய பாய் பிரன்ட் பத்தி பேசாதா’ என்று கூறியிருந்ததை வைத்து பார்க்கும் போது உமாபதி, யாஷிகாவின் காதலராக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.

அதே போல மஹத் மற்றும் டேனி இருவருமே யாஷிகாவிற்கு மிகவும் நெருக்கமாக தான் இருந்து வருகின்றனர். எனவே, இவர்கள் இருவரும் யாஷிகாவின் காதலரை பற்றி பேசி இருப்பதால், யாஷிகா காதலிப்பது ஒருவேளை உண்மையாக இருக்குமோ என்ற எண்ணமும் தோன்றுகிறது.

Advertisement