புதிய படம் குறித்து ட்வீட் செய்த யாஷிகா – அவர் விபத்தில் சிக்கிய காரை வீடியோ எடுத்து போட்டு கேலி செய்த நபர்.

0
1098
yashika
- Advertisement -

சமீபத்தில் கோர விபத்தில் சிக்கி சிகிச்சையில் இருந்து வரும் யாஷிகா விபத்திற்கு பின் தன் படம் குறித்து முதன் முறையாக பதிவிட்டுள்ளார். கடந்த வாரங்களுக்கு முன் சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் வள்ளி ஷெட்டி பவானி என்ற பெண் பலியானார். இந்த விவகாரத்தில் யாஷிகா மீது அதி வேகமாக காரை ஓட்டியது, உயிர் சேதம் ஏற்படுத்தியது என்று மூன்று பிரிவுகளில் வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் விபத்துக்கு பின்னர் யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படத்தை நீக்கியுள்ளார்.மேலும், விபத்திற்கு பின்னர் யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருந்தார். இப்படி ஒரு மிகப் பெரிய விபத்திலிருந்து என்னை காப்பாற்ற இதற்காக கடவுளுக்கு நன்றி சொல்வதா இல்லை என்னுடைய நெருங்கிய தோழியை என்னிடமிருந்து பிரித்துக் கொண்டதற்காக கடவுளை படிப்பது என்பது தெரியவில்லை.

இதையும் பாருங்க : ஓபன் ட்ரென்ச் கோட், உள்ளாடையை வெளிச்சம் போட்டு காட்டிய அஜித் பட நடிகை பார்வதி நாயர்.

- Advertisement -

எனக்கு வாழவே பிடிக்கவில்லை என்றும் பதிவிட்டு இருந்தார். அறுவை சிகிச்சைக்கு பின் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ள யாஷிகா சென்னையில் தனது தோழி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். யாஷிகா விபத்தில் சிக்கியுள்ளதால் அவரை கமிட் செய்த தயாரிப்பாளர்கள் குழம்பி போய்யுள்ளனர்.

இப்படி ஒரு நிலையில் விபத்திற்கு பின்னர் யாஷிகா, தான் நடித்துள்ள படம் குறித்து முதன் முறையாக ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். யாஷிகா மற்றும் எஸ் ஜே சூர்யா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார். இதற்கு நன்றி தெரிவித்து யாஷிகா போட்ட பதிவில் ட்விட்டர் வாசி ஒருவர், யாஷிகா விபத்தில் சிக்கிய கார் சாலையோரம் இருப்பதை வீடியோ எடுத்து போட்டு ‘இந்த வண்டி யாரு வண்டி தெரியுதா’ என்று கமன்ட் செய்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement